வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத பரம புருஷ பகவானின் சக்தியை நாம் ஏற்றுக்கொள்ளும் வரை, கடவுள் எனும் வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாக நம்மால் புரிந்து கொள்ள இயலாது. கடவுள் நம்மை போல "ஒரு நபர்" என நீங்கள் நினைத்தால்... ஆம், நம்மைப் போலவே கடவுளும் ஒரு நபர்தான். வேதங்களில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது: "நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதனானாம்" (கத உபநிஷதம் 2.2.13). பல சேதனர்கள், அதாவது பலப்பல ஜீவராசிகள் உள்ளன, அவர்கள் அனைவரும் நித்தியமானவர்கள். அவர்கள் பலர், பன்மை எண்ணிக்கையில் உள்ளனர். "நித்யோ நித்யாநாம் சேதனஸ் சேதனானாம்". இந்தக் கூற்றுப்படி மற்றொரு நித்யர் இருக்கிறார், "நித்யோ நித்யாநாம்", இரண்டு உள்ளது. ஒன்று ஒருமை, மற்றொன்று பன்மையில் உள்ளது. இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? வித்தியாசம் என்னவென்றால், "ஏகோ யோ பஹூனாம் விததாதி காமான்". அந்த ஒருமை எண்ணிக்கையில் குறிப்பிடப்படும் நித்தியர் மிகவும் சக்தி வாய்ந்தவர், அவர் அனைத்து பன்மை ஜீவராசிகளின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார்.
|