TA/750403b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், "மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கஷ்சித் யததி சித்தயே" (பகவத் கீதை 7.3): பல கோடி நபர்களில், ஒருவர் மட்டுமே வாழ்க்கையின் பூரணத்துவம் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் கொள்வர். சாதாரணமாக மக்கள் இதனை விரும்புவதில்லை. மேலும் அத்தகைய கோடிக்கணக்கான நபர்களில், "யததாம் அபி சித்தானாம்" (பகவத் கீதை 7.3), வாழ்க்கையின் பூரணத்துவத்திற்காக முயற்சிப்பவர்களில், பல கோடிக்கணக்கானவர்களில் ஒருவர் மட்டுமே என்னை, கிருஷ்ணனைப் புரிந்து கொள்ள முடியும். மாயை மிகவும் வலிமையானது. "மனுஷ்யாணாம் சஹஸ்ரேஷு கஷ்சித் யததி சித்தயே". பகவத்-கீதையில் எல்லாம் கூறப்பட்டு இருக்கிறது. கிருஷ்ண உணர்வு சாதாரண மனிதனுக்கானது அல்ல. மிகவும் அதிர்ஷ்டசாலி, பாக்யம் நிறைந்த ஜீவனுக்கானது. "குரு-க்ருஷ்ண க்ருபயா பாய பக்தி-லதா-பீஜ" (சைதன்ய சரிதாம்ருதா மத்திய லீலை 19.151). இங்கு அனைத்து ஜீவராசிகளும், பிரபஞ்சம் முழுவதும் அலைந்து திரிபவை... "ஏ ரூபே பிரம்மாண்ட ப்ரமிதே". ஒருவர் குரு மற்றும் கிருஷ்ணரின் அருளைப் பெற்றால் மட்டுமே, இறைவனை புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் ஒருவர் வாதிட்டால், அவர் மீண்டும் துரதிர்ஷ்டசாலி ஆவார்.
750403 - காலை நடைப்பயிற்சி - மாயாபூர்