TA/750405 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
பிரம்மனே அனைத்தையும் படைப்பவர் என்று உங்களுக்குத் தெரியும். அவர் ஒரு ஈஸ்வரர். இந்த பிரபஞ்சத்தை அவர் படைத்துள்ளார். ஆனால் அவர் பரம ஈஸ்வரர் அல்லர். அவர் கர்போதக சாயி விஷ்ணுவால் படைக்கப்பட்டவர். அவரும் ஈஸ்வரரே, ஆனால் அவர் மகா-விஷ்ணுவின் விரிவாக்கம். அதேபோல் மகாவிஷ்ணுவும் ஈஸ்வரரே. மகாவிஷ்ணு சங்கர்ஷணரின் விரிவாக்கம். சங்கர்ஷணர் ஸ்ரீமன் நாராயணனின் விரிவாக்கம். இவ்வாறே ஒவ்வொரு மேல் நிலையையும் படைத்தவர் யார் என்று நீங்கள் தொடர்ந்து ஆராயும் பொழுது, ஒரு குறிப்பிட்ட நிலையை படைத்தவர் யாரும் இல்லை என்ற பூரண உண்மையை கண்டுணர்வீர்கள். அதுவே — ”ஈஸ்வர: பரம: கிருஷ்ண: சச்சிதானந்த-விக்ரஹ: அனாதி..." (பிரம்ம சம்ஹிதை 5.1). எனவே அத்தகைய உச்சபட்ச மேல்நிலையைப் படைத்தவர் என்று யார் ஒருவரும் இல்லை. "அனாதிர் ஆதி:" அவர் எல்லாவற்றிற்கும் தொடக்கம், ஆனால் அவருக்கு ஆரம்பம் என்று ஏதும் இல்லை. அது எவ்வாறு சாத்தியமாகும்? அவரை படைத்தவர் யார் ஒருவரும் இலர். ஜட உலகில் பல ஈஸ்வரர்களுக்கு ஆரம்பம் உள்ளது. அது எவ்வாறு? இதன் காரணம், "ஸ்வராட்." அதுதான் வேறுபாடு... "ஸ்வராட்", முற்றிலும் சுதந்திரமானவர். "ஜன்மாத்ய அஸ்ய யத:" (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1). இது வேதாந்த சூத்திரம்; வேதாந்த சூத்திர-பாஷ்யத்தால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. "ஜன்மாத்ய அஸ்ய யத: அன்வயாத் இதரதஸ் ச அர்த்தேஷு அபிஜ்ஞ: ஸ்வராட்" (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1). ஸ்வராட்—ஈஸ்வரர்; பரம ஈஸ்வரர். அவருக்கு ஈஸ்வரர் என்று யாரும் இல்லை. அனைவருக்கும் மேலான ஈஸ்வரராக அவரே விளங்குகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மேலான ஈஸ்வரர் யாரும் இல்லை. அவரே அனைத்திற்கும் தொடக்கம்; பரம பூரணமானவர்.
750405 - மாயாபூர் சைதன்ய சரிதாம்ரிதம் ஆதி லீலை 01.12 சொற்பொழிவு