TA/750405b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
நமக்கு புலன்கள் உள்ளன; அந்த புலன்கள் திருப்தி அடைய விரும்புகின்றன; இதுவே புலன் இன்பம். புலன்கள் திருப்தி அடைவதற்கான சரியான வழியை நாங்கள் உங்களுக்கு கற்பிக்கிறோம். "உங்கள் புலன்களை மழுங்கச் செய்யுங்கள்" என்று நாங்கள் கூறவில்லை. மாறாக, சரியாக முறையில் அனுபவியுங்கள் என்றே கூறுகிறோம். "தபோ திவ்யம் யேன சுத்தயேத் சத்வ ஹி அஸ்மத் பிரம்ம-சௌக்யம் அனந்தம்" (ஸ்ரீமத் பாகவதம் 5.5.1). நீங்கள் புலன் இன்பத்தை விரும்புகிறீர்கள், ஆனால் பிணியால் பீடிக்கப்பட்ட உங்களது வாழ்க்கை நிலையால் அது தடுக்கப்படுகிறது. எனவே உங்களை நீங்களே தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் புலன்களை நிரந்தரமாக அனுபவியுங்கள். இது தான் வகுக்கப்பட்ட வாழ்க்கை முறை. இந்த வழிமுறையில் நீங்கள் புலன் இன்பத்தை நிறுத்தவில்லை. ஆனால் உங்கள் நோயுற்ற நிலையில் புலன்களைத் திருப்திப்படுத்த முயற்சிப்பதே தவறு. உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், நீங்கள் ஒரு இனிப்பை உண்டு மகிழ முடியாது. அது சுவை தராது. முதலில் உங்களைக் குணப்படுத்தி, பின் இனிப்பை அனுபவியுங்கள். அதுவே எங்கள் திட்டம்.
750405 - மாயாபூர் காலை நடைப்பயிற்சி