"ஒருவேளை இப்பொழுது உங்களிடம் பத்தாயிரம் இருக்கிறது. அதை நாம் நூறாயிரத்திற்கு பெறுக்குவோம். அதுதான் தேவைப்படுகிறது. பிறகு நூறாயிரம் மில்லியனுக்கு, மேலும் மில்லியன் பத்து மில்லியனுக்கு. எனவே ஆச்சாரியர்க்கு பற்றாக்குறை இருக்காது, மேலும் மக்கள் கிருஷ்ண உணர்வை மிகவும் எளிதாக புரிந்துக்கொள்வார்கள். எனவே அந்த அமைப்பை ஏற்படுத்துங்கள். பொய்யாக அகந்தை கொள்ளாதீர்கள். ஆச்சாரியர்களின் அறிவுரைகளை பின்பற்றுங்கள், மேலும் உங்களை குற்றமற்றவர்களாக, முதிர்ந்தவர்களாக்க முயற்சி செய்யுங்கள். பிறகு மாயாவை சண்டையிட்டு வெளியாக்குவது மிகவும் சுலபமாகும். ஆம். ஆச்சாரியர்கள், அவர்கள் மாயாவின் செயல்களுக்கு எதிராக போர் பிரகடனம் செய்வார்கள்."
|