TA/750406c காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
(பக்தர்) ஜகதீசர்: ஸ்ரீல பிரபுபாதா, உங்கள் புத்தகங்களில், பசுவின் நிலையும் பிராமணனின் நிலையைப் போலவே முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். "கோ-பிராமண-ஹிதாய ச." பசுக்களுக்கும் பிராமணர்களுக்கும் நலம் விரும்பும் கிருஷ்ணருக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். பிராமண கலாச்சாரம் மற்றும் பசுவின் பாலில் இருந்து தயாரிக்கும் வாழ்க்கை முறை ஆகியவை ஒரு மனிதனை ஆன்மீக புரிதலுக்கு வழி நடத்துகின்றன. எனவே அவை இரண்டும் மிக முக்கியமான விஷயங்கள், "கோ-பிராமண ஹிதாய ச." சமூகத்தில், பிராமண கலாச்சாரம் மற்றும் பசு பாதுகாப்பு இல்லாவிட்டால், அது விலங்கு சமூகம்; மனித சமூகம் அல்ல. மனித வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றவே, நாம் விலங்கு சமூகத்தை மனித சமூகமாக மாற்ற முயற்சிக்கிறோம். இதுவே கிருஷ்ண பக்தி உணர்வு.

750406 - காலை உலா - மாயாபூர்