பந்த பிணைப்புகளில் கட்டுண்ட ஆத்மாக்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை மறந்து, சுதந்திரமாக ஜட உலக வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறார்கள். இதன் பலனாக அவர்களுக்கு போதிய தண்டனை வழங்குவதே மாயையின் நோக்கம். அவர்கள் நிபந்தனைக்குட்பட்ட கட்டுண்ட ஆத்மாக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். "பூத்வா பூத்வா ப்ரலீயதே" (பகவத் கீதை 8.19). இந்த கட்டுண்ட வாழ்க்கையில் நாம் ஒரு வகையான உடலை ஏற்றுக்கொண்டு, போதுமான அளவு துன்பப்படுகிறோம். ஆம், இது வெறுமனே துன்பம் மட்டும் தான். இதில் எங்கே இன்பம் இருக்கிறது? பத்து மாதங்கள் தாயின் கருப்பையில் இருப்பது இன்பமா? காற்றே புகாத பையில் அடைக்கப்பட்டு வாழ்வது? ஒரு கற்பனைக்காக, இப்போது உங்களை காற்றே புகாத பையில் வைத்தால், மூன்று நொடிகளில் இறந்துவிடுவீர்கள். மூன்று வினாடிகள் கூட காற்று இல்லாமல் நம்மால் வாழ முடியாது. இதுதான் நமது கட்டுண்ட வாழ்க்கை நிலை.
|