TA/750407b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
ஹரி கதையை தொடர்ந்து கேட்பது — இது ஒரு மருத்துவ செயல்முறை—இதயம் தூய்மையாக்கப்பட்டு, அவர்கள் பகவத் ஞானத்தை பெறுவார்கள். இப்போது இதயம் அசுத்தமாக உள்ளது, அதனால் அவரால் நாம் வழங்கும் கிருஷ்ண பக்தி உணர்வைப் பெற முடியாது. எனவே இது அருமருந்து. "கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா. ஹரேர் நாம ஹரேர்..." (சைதன்ய சரிதாம்ரிதம் ஆதி லீலை 17.21). எனவே முடிந்தவரை ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபியுங்கள். இதனை யார் கேட்டாலும், அவர் படிப்படியாக தூய்மையடைவார். "சேதோ-தர்ப்பண-மார்ஜனம்" (சைதன்ய சரிதாம்ரிதம் அந்த்ய லீலை 20.12). அதன் பிறகு "பவ-மஹா-தாவாக்னி...". பிறகு அவரது ஜட உலக வேதனைகள் முடிவுக்கு வரும். இதுவே ஒரே மருந்து. எனவே ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபியுங்கள். எப்படியாவது, அவர்களுக்கு கேட்கும் வாய்ப்பை கொடுங்கள், அது மருந்தாக செயல்படும். அவர் விரும்பவில்லை என்றாலும், நீங்கள் ஜபியுங்கள், பலவந்தமாக கேட்க வையுங்கள், அவர் குணமடைவார்.
750407 - காலை உலா - மாயாபூர்