TA/750408 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
தற்போதைய நிலையில், நமது கட்டுண்ட வாழ்வில், பரம்பொருளான கடவுளுடன் நமக்கிருக்கும் உறவை நாம் மறந்துவிட்டோம். இதுவே நமது கட்டுண்ட வாழ்க்கை. ஒரு மகன் தனது பணக்கார தந்தையை, செல்வந்த தந்தையை மறந்து தெருவில் அலைவதைப் போல அலைக்கழிவதே நமது நிலை. நாம் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணனின் புதல்வர்கள், அவரின் அம்சங்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆறு செல்வங்களான, செல்வம், வலிமை, செல்வாக்கு, அழகு, அறிவு, துறவு நிறைந்தவர்; பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூரணமானவர். என் தந்தை முழுமையானவராக இருந்தால், நான் அவரின் மகன், அன்பான மகன், பிறகு ஏன் நான் தெருவில் அலைய வேண்டும்? இதன் காரணம் மாயை. நாம் இந்த ஜடப் பொருட்களால் ஆன ஒரு உடலாக நம்மை நினைத்துக் கொள்கிறோம்.
750408 - சைதன்ய சரிதாம்ரிதம் ஆதி லீலை 01.15 சொற்பொழிவு, மாயாபூர்