TA/750408b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
'ராதே' என்று ஜெபிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை தான். ஆனால் சில சமயங்களில், ஒரு கண்டுபிடிப்பாக, புதியதாக ஒன்றினை உருவாக்கும் போது, அதன் தரம் தாழ்ந்து விடுகிறது. ஆகவே 'ஹரே கிருஷ்ணா' மற்றும் 'ஸ்ரீ-கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்தா' ஆகிய மந்திரங்களில் நாம் நிலைத்திருப்பது நன்று. இல்லையெனில்... சஹஜியாக்களைப் போலவே, அவர்கள் கண்டுபிடித்துள்ள 'நிதாய்-கௌர ராதே ஷ்யாமா, ஹரே கிருஷ்ணா ஹரே ராமா' போன்ற விஷயங்கள் படிப்படியாக வந்து விடும். ஆனால் அவை அங்கீகரிக்கப்படவில்லை. அவை 'சர-கீர்த்தனம்', அதாவது 'கற்பனைக் கீர்த்தனம்' என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் 'ராதே, நிதாய்-கௌர' என்று ஜெபிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை. இருப்பினும் இந்த பஞ்ச-தத்துவ மற்றும் மஹா-மந்திரத்தில் நிலைத்திருப்பது நல்லது. எவ்வாறு 'நிதாய் கௌர ராதே ஷ்யாமா, ஹரே கிருஷ்ணா ஹரே ராமா' இருக்கிறதோ அது போலவே 'நிதாய்-கௌர, ராதே ஷ்யாமா' என்பதும் இருக்கிறது, ஆனால் இவை அங்கீகரிக்கப்படவில்லை. "மஹாஜனோ யேன கத ஸ பந்தா:" (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 17.186). நாம் மஹா ஜனங்களை, சான்றோர்களை, ஆச்சாரியர்களைப் பின்பற்ற வேண்டும்.
750408 - காலை நடை உலா - மாயாபூர்