நம் உடல் நிரந்தரமானது அல்ல. ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருமேனி நித்தியமானது, நிரந்தரமானது, அறிவு மற்றும் ஆனந்தம் நிறைந்தது. நாம் இந்த நிலையற்ற உடலை ஏற்றுக் கொண்டதால், நாம் கவலைகளால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கிறோம். நமது கவலை என்னவென்றால், நாம் எப்போதும் இந்த நிலையற்ற உலகில் நிலைத்திருக்க போராடுகிறோம். ஆனால் இந்த உடலில் அத்தகைய தன்மை சாத்தியமில்லை. ஏனென்றால், இந்த உடல் நிரந்தரமானது அல்ல. எனவே, நாம் இந்த நிலையற்ற உடலில் நிலைத்திருக்க முயற்சிப்பதால், சஞ்சலங்கள் ஏற்படுகின்றன. நாம் எப்போதும் கவலைப்படுகிறோம். இது ஏன்? காரணம் ஏனென்றால், 'அசத்-க்ரஹாத்' எனும் நிலையற்ற தன்மை கொண்ட உடலை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதே ஆகும் என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
|