கடவுள் என்றால் என்ன, அவரது சட்டம் என்ன, அதை எப்படிப் பின்பற்றி வாழ்க்கையில் வெற்றி பெறுவது என்பதைப் புரிந்துகொள்வதற்காகவே மனித வாழ்க்கை உருவாக்கப்பட்டது. சம்பந்தம், அபிதேயம், பிரயோஜனம். சம்பந்தம் என்றால், முதலில் இந்த உலகத்துடனோ அல்லது கடவுளுடனோ நமக்கு என்ன பந்தம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பல விஷயங்கள் உள்ளன. இங்கு அனைத்தும் ஒன்றுக்கொன்று சார்ந்துள்ளது - இது ஒரு சார்பு உலகம். கடவுளுக்கும் நமக்கும் இடையே உள்ள சார்புநிலை என்ன? கடவுள் இருக்கிறார். ஆனால் நாத்திகர் கடவுளின் இருப்பை மறுக்கிறார்கள். அது தேவையற்றது. அவர்கள் கடவுளின் இருப்பை மறுக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் கடவுளின் சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். அப்படி இருக்க, கடவுளின் இருப்பை எப்படி மறுக்க முடியும்? பகவத் கீதையில், "மிருத்யு: சர்வ-ஹரஸ் சாஹம்" (பகவத் கீதை 10.34) என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். நாத்திகர் கடவுளை நம்புவதில்லை, ஆனால் அவர்கள் மரணத்தை நம்புகிறார்கள். அதை அவர்கள் நம்பியே ஆக வேண்டும்.
|