ஆன்மீக உணர்தலின் தளத்திற்கு நீங்கள் உயர விரும்பினால், 'சர்வோபாதி-வினிர்முக்தம்' என்பது மிகவும் முக்கியம். 'சர்வோபாதி-வினிர்முக்தம் தத்-பரத்வேன நிர்மலம்' (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.170). இதுவே ஆரம்பம். அதாவது பிரம்ம-பூத உணர்வு தான் தொடக்கம். ஆம் பிரம்ம-பூத உணர்தல். நாரத பஞ்சராத்ரத்தில் கூறப்பட்டுள்ள 'சர்வோபாதி-வினிர்முக்தம்', மற்றும் பகவத்-கீதை கூறும் 'பிரம்ம-பூத: பிரசன்னாத்மா' (ஸ்ரீமத் பகவத் கீதை 18.54), இரண்டும் ஒன்றையே வலியுறுத்துகின்றன. மேலும் பல்வேறு வேத சாஸ்திரங்களும் இதையே கூறுகிறது. ஆகையால் இது அதிகாரப்பூர்வமானது. இதில் எந்த முரண்பாடும் இல்லை. பௌதிக தளத்தில் நீங்கள் ஒரு புத்தகம் எழுதுகிறீர்கள், நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன், பிறகு நான் உங்களை மறுக்கிறேன், நீங்களும் என்னை மறுக்கிறீர்கள். இது பௌதிக தளம். ஆனால் ஆன்மீகத்தில், சுயத்தை உணர்ந்த தளம் ஒன்று உள்ளது. அதில் குற்றம் குறை ஏதுமில்லை; மாயை இல்லை; குறைபாடுள்ள புலன்கள் இல்லை; ஏமாற்றுதல் இல்லை. அதுதான் ஆன்மீக தளம்.
|