TA/750412 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹைதராபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
எனவே, இந்த தத்துவத்தை அவ்வாறே பிரசாரம் செய்ய முயற்சிக்கிறோம். ஒருவேளை இதை உணர்வோர் மிகச் சொற்ப எண்ணிக்கையில் இருக்கலாம். ஆனால் "ஏகஸ் சந்த்ரஸ் தமோ அன்தி ந சித்தர சஹஸ்ர" (சாணக்ய பண்டிதர்). ஒரு சந்திரன் இருந்தால் போதுமானது. இலட்சக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுவதில் என்ன பயன்? அதுதான் நம் பிரச்சாரம். ஒருவர் கிருஷ்ண தத்துவம் என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டால், எனது பிரசாரம் வெற்றி பெற்றதாக அர்த்தம். ஒளி இல்லாத இலட்சக்கணக்கான நட்சத்திரங்கள் எங்களுக்கு தேவையில்லை. அவற்றினால் என்ன பயன்? அதுதான் சாணக்ய பண்டிதரின் கூற்றும் கூட. "வரம் ஏக புத்ர ந ச மூர்க்க-சதைர் அபி". ஒரு மகன், அவன் கற்றறிந்தவனாக இருந்தால், அது போதுமானது. "ந ச மூர்க்க-சதைர் அபி". நூற்றுக்கணக்கான மகன்கள், அனைவரும் முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்களாக இருந்தால் என்ன பயன்? "ஏகஸ் சந்த்ரஸ் தமோ அன்தி ந சித்தர சஹஸ்ர". ஒரு சந்திரன் ஒளிர போதுமானது. இலட்சக்கணக்கான நட்சத்திரங்கள் தேவையில்லை. அதேபோல், இலட்சக்கணக்கான சீடர்களை நாம் விரும்புவதில்லை. ஒரு சீடர் கிருஷ்ணரின் தத்துவத்தைப் புரிந்து கொண்டிருப்பதை நான் காண விரும்புகிறேன். அதுவே வெற்றி.
750412 - உரையாடல் - ஹைதராபாத்