TA/750412b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹைதராபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
அனாஸ்ரித கர்ம-பலம் கார்யம் கர்ம கரோதி ய: ஸ சந்யாசி "கர்ம பலனைப் பற்றிக் கவலைப்படாமல், செய்ய வேண்டிய கடமையைச் செய்பவனே சந்நியாசி" (பகவத் கீதை 6.1). அனாஸ்ரித: கர்ம... ஒவ்வொருவரும் தங்கள் புலன் இன்பத்திற்காக நல்ல பலாபலன்களை எதிர்பார்க்கிறார்கள். அது ஆஸ்ரித: கர்ம-பலம். அவன் செய்த செயல்களுக்கு நல்ல பலன்களை எதிர் நோக்குகிறான். ஆனால் செயல்களின் பலனைப் பற்றிக் கவலைப்படாதவனோ, இது என் கடமை. கார்யம். கார்யம் என்றால் "இது என் கடமை. என்ன பலன் வந்தாலும் பரவாயில்லை. நான் செய்ய வேண்டிய செயலை என் முழுத் திறமையுடன் உண்மையுடன் செய்ய வேண்டும். செயல் ஆற்றிய பிறகு நான் பலனைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கையில் பலன் உள்ளது." கார்யம்: "இது என் கடமை. என் குரு மஹாராஜர் கூறினார், அதனால் இது என் கடமை. அது வெற்றியோ தோல்வியோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பொறுத்தது." இந்த விதமாக, யார் செயல் செய்தாலும், அவன் சந்நியாசி. சந்யாசம் என்பது வெறும் காவி உடை அல்ல; பகவத் கைங்கரியம் செய்யும் மனப்பான்மையே. ஆம், அதுதான் சந்நியாசம்.
750412 - ஹைதராபாத் உரையாடல்