TA/750412c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹைதராபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
சரி, நீங்கள் எப்போதும் ஆந்திர குடிமக்களாகவே இருந்தால் அது மிகவும் நல்லது தான். ஆனால் அது அனுமதிக்கப்படாது. இயற்கையின் விதியால் உங்களது இந்த ஆந்திர வாழ்வியல் கருத்தாக்கத்திலிருந்து நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள். "மிருத்யு சர்வ-ஹரஸ் சாஹம்" (பகவத் கீதை 10.34) என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார். மரணம் வரும்போது, 'ஓ என் அன்பான மரணமே, நீ என்னை தொட முடியாது. நான் ஆந்திரா', 'நான் இந்தியன்', 'நான் அமெரிக்கன்' என்று கூறி தப்பிக்க முடியாது." "இயலாது. வாய்ப்பு இல்லை. வெளியே செல்லுங்கள்" என்று இயற்கை நியதி உங்களிடம் கூறி விடும். அப்படியானால் இதனை உணர்ந்து கொள்ளும் அறிவு எங்கே இருக்கிறது? "யஸ்யாத்ம-புத்தி: குணபே த்ரி-தாதுகே ஸ்வ-தீஹி கலத்ராதிஷு பௌம-இஜ்ய-தீ: ஸ ஏவ கோ-கர:" (ஸ்ரீமத் பாகவதம் 10.84.13). நாம் வாழும் இந்த வகையான நாகரிகம் பசுக்கள் மற்றும் கழுதைகளின் நாகரிகம். கோ-கர:. கோ என்றால் பசு, கர என்றால் கழுதை. எனவே உண்மையிலேயே நாம் யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்... சைதன்ய மகாபிரபு இதனை போதித்தார். அவர் கூறினார், "நான் பிராமணன் அல்ல; க்ஷத்திரியன் அல்ல; வைசியன் அல்ல; சூத்திரன் அல்ல; பிரம்மச்சாரி அல்ல; சந்யாசியும் அல்ல." "அல்ல, அல்ல" - நேதி, நேதி.

"அப்படியானால் நீங்கள் யார்?" "கோபி-பர்த்து: பாத-கமலயோர் தாஸ-தாஸ-தாஸானுதாஸ:" (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 13.80). இதுவே சுயத்தை உணர்தல்.

750412 - ஸ்ரீமத் பாகவதம் 05.05.02 சொற்பொழிவு - ஹைதராபாத்