TA/750413 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹைதராபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
ஒருவர் பிராமண தகுதிகளைப் பெறுவதன் மூலம் மனித சமூகத்தில் மிக உயர்ந்த நபராக முடியும். ஆனால் அதுவும் அவருடைய உண்மையான இயல்பு அல்ல. உண்மையான இயல்பு பிராமண தகுதிகளுக்கு அப்பாற்பட்டது; வைஷ்ணவ தகுதியை சார்ந்தது. வைஷ்ணவ தகுதி என்றால் ஒருவர் முழுமையாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவையில் தன்னை அர்ப்பணிப்பது. ஸர்வோபாதி விநிர்முக்தம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.170) - எல்லாவிதமான உலகியல் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்றவர். நான் ஒரு கற்றறிந்த பிராமண பண்டிதன் என்று தன்னையே நினைத்துக் கொண்டாலும், அதுவும் ஒரு தவறான கருத்து ஆகும். அதுவும் உண்மையான இயல்பு அல்ல. "நான் பிராமணன் அல்ல, க்ஷத்திரியன் அல்ல, வைசியன் அல்ல, சூத்திரன் அல்ல, அமெரிக்கன் அல்ல, இந்தியன் அல்ல, இதுவும் இல்லை, அதுவும் இல்லை; நான் வெறுமனே கிருஷ்ணரின் ஆன்மீக அம்சம், மேலும் கிருஷ்ணருக்கு சேவை செய்வது மட்டுமே எனது தொண்டு" என்று ஒருவன் புரிந்துகொள்ளும்போது, ஆனுகூல்யேன க்ருஷ்ணானு-சீலனம் பக்திர் உத்தமா (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.167) பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான செயல்களைச் செய்வதே மிக உயர்ந்த பக்தி; உன்னத பக்தி. அதுவே முதல் தரமான உயர்ந்த வாழ்க்கை.
750413 - ஸ்ரீமத் பாகவதம் 05.05.02 சொற்பொழிவு - ஹைதராபாத்