TA/750414 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் ஹைதராபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் ஜட உலகவாதிகள், "நாங்கள் கடவுளைப் பார்க்கவில்லை, ஆகையால் நம்பவில்லை." என்று சொல்கிறீர்கள். அதுபோலவே நான் சொல்கிறேன்: "நீங்கள் நிலவுக்கு சென்ற பொழுது நான் உங்கள் உடன் வரவில்லை. ஆகவே உங்கள் கூற்றை நான் நம்பவில்லை." அவ்வளவுதான். முடிந்தது. நான் எப்படி நம்புவது? நீங்கள் நிலவுக்கு போனதாகச் சொல்கிறீர்கள். ஆனால் நான் உங்களுடன் வரவில்லை, அதனால் நான் நம்பவில்லை. அவ்வளவுதான். அதுதான் என் வாதம். நீங்கள் என்னை உங்களுடன் அழைத்துச் செல்லவில்லை. நான் எப்படி நம்புவது?
தமல கிருஷ்ண மகராஜ்: புகைப்பட சான்றுகள்? ஸ்ரீல பிரபுபாதர்: நான் ஏன் படங்களை நம்ப வேண்டும்? நான் அதைப் பார்க்கவில்லை. இது பொய்யான படம். நீங்கள் கடவுளைப் பார்க்க முடியவில்லை, ஆகையால் நம்பாதீர்கள் என்று சொல்வது போல, நான் உங்களுடன் வரவில்லை, நான் நம்பவில்லை என்று நான் சொல்வேன். |
750414 - ஹைதராபாத் உரையாடல் |