கிருஷ்ண பக்தி உணர்வு இயக்கம் என்பது நீங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சக்திகளில் ஒன்றில் அடைக்கலம் புக வேண்டும் என்பதுதான். ஆன்மீக சக்தியில் அடைக்கலம் கொள்வது நல்லது. அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இருப்பினும் சுதந்திரமாக இருக்க முடியாது; அது சாத்தியமில்லை. எவ்வாறு ஒருவர் அரசாங்க சட்டங்களை மீற முடியாதோ அதுபோலவே இறைவனின் சட்டங்களையும் மீற முடியாது; சாத்தியமற்றது. நீங்கள் குற்றவியல் சட்டங்களை மீறினால் அதற்குண்டான குற்றவியல் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவீர்கள். "நான் அரசாங்கத்தை எதிர்க்கிறேன்" என்று நீங்கள் கூற முடியாது. அது சாத்தியமில்லை. அதேபோல், நீங்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் அவரது சக்திகளையும் எதிர்க்க முடியாது. கிருஷ்ணரின் ஆன்மீக சக்தியின் அடைக்கலம் கொண்டு ஆனந்தமாக இருப்பது நல்லது. மஹாத்மாநஸ் து மாம் பார்த்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா: (பகவத் கீதை 9.13). பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆன்மீக சக்தியிடம் அடைக்கலம் ஏற்பவரே மஹாத்மா ஆகும்.
|