TA/750414c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹைதராபாத் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
இன்றைய நவீன நாகரிகம் வேதகால நாகரிகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பிறப்பு, இறப்பு, மூப்பு மற்றும் பிணி என்ற இந்த சுழற்சியை நிறுத்துவது தான் பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு என்று அறிவதே வேதகால நாகரிகம் ஆகும். அதுதான் மனித நாகரிகமும் கூட. அவ்வாறு இல்லாது, ஒரு பண்பட்ட பன்றியாக, அழகாக உடையணிந்த பன்றியாக மாறுவது வேத நாகரிகம் அல்ல. அது பன்றி நாகரிகம்.

ஆகவே, நமது கிருஷ்ண பக்தி உணர்வு இயக்கம் மக்களை பன்றி நாகரிகம் அல்லது நாய் நாகரிகத்திலிருந்து மனித நாகரிகத்திற்கு காப்பாற்ற முயற்சிக்கிறது. மனித நாகரிகம் என்றால் எளிமையான வாழ்க்கை மற்றும் ஆன்மீக உணர்வில் முன்னேற்றம் அடைவது. மாறாக தேவையற்ற செயற்கையான வாழ்க்கை முறையை அதிகரிப்பது அல்ல. வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று அறிந்து, எந்த நிலையிலும் வாழ்க்கையின் நோக்கத்தை அடைவதில் வெற்றி பெற நாம் முயற்சிக்க வேண்டும். அதுதான் வேதகால நாகரிகம் ஆகும்.

750414 - ஹைதராபாத் ஆயுட்கால பக்தரின் இல்லத்தில் ஆற்றிய உரை