தன்னில் கிருஷ்ணரைத் தேடுபவன்... தன் உள்ளேயே அவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்கிறான். அவரை தரிசிக்க நீ தகுதி பெற வேண்டும். அது அவசியம். அதுவே பக்தி யோகம் எனப்படும். "ப்ரேமாஞ்சன-சூரித-பக்தி-விலோசனேன சந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி" (பிரம்ம சம்ஹிதை 5.38) என்று பிரம்ம-சம்ஹிதையில் சொல்லப்பட்டிருக்கிறது . வெறும் உடற்பயிற்சியாலோ உடலை வருத்திக் கொள்வதாலோ நமக்கு இது சாத்தியமில்லை. ஒருவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தெய்வீக அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். "ப்ரேமாஞ்சன-ச்சூரித" உன் கண்கள் இறைவனின் அன்பெனும் அஞ்சனத்தால் தீட்டப்பட்டால், நீ அவரை உனக்குள்ளேயே இருபத்தி நான்கு மணி நேரமும் தரிசிக்கலாம். "ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி". இதை புரிந்து கொள்வது கடினமல்ல, ஏனெனில் நீ யாரை நேசிக்கிறாயோ, அவரை நீ எப்போதும் நினைக்கிறாய், அவரது இருப்பை எப்போதும் உணர்கிறாய். அப்படியிருக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி நாம் ஏன் நினைக்கக் கூடாது? அது கடினமானதல்ல. ஆகையால்தான் கிருஷ்ணர் நமக்கு உபதேசிக்கிறார். "மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு" (பகவத் கீதை 18.65) இத்தகைய அன்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குக் கூறுகிறார்.
|