இங்கு அனைத்தும் உரிய உன்னத நிலையில் படைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, நமது பாரத பூமி. இது இறைவனை உணர்வதற்காகவே விசேஷமாக அமைந்துள்ளது. பிறப்பிலிருந்தே ஒருவன் கிருஷ்ண உணர்வுடன், கடவுள் உணர்வுடன் வாழ்கிறான். இந்த நாட்களில், நீங்கள் ஹைதராபாத் நகரத்தில் பார்த்திருப்பீர்கள். உங்கள் மாநாடு நடந்து கொண்டிருந்தது. நான் அங்கு பகவான் கிருஷ்ணரைப் பற்றி பிறருக்கு எந்தவித புலன் இன்பமும் அளிக்காத, வறண்ட தலைப்பில் பேசிக் கொண்டிருந்தேன். இருப்பினும் குறைந்தது ஐயாயிரம் பேராவது எனது பேச்சைக் கேட்க வந்திருந்தார்கள் (விருந்தினர் சிரிக்கிறார்). ஆகையால் தான் கூறுகிறேன், இந்தியா மிகவும் புண்ணிய பூமி. மக்கள் இன்னமும் கிருஷ்ணரின் போதனைகளை உள்வாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இந்த தேசம் மிகவும் பாக்கியம் செய்தது. ஆகவே நாம் மக்களுக்கு இந்த நல் வாய்ப்பை வழங்க வேண்டும். இது நமது கடமை. அரசாங்கத்தின் கடமை. ஆசிரியரின் கடமை. தந்தையின் கடமை. இது ஸ்ரீமத் பாகவதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. "பிதா ந ச ஸ்யாத்". குருவின் கடமை.
|