"பாரத-பூமிதே மனுஷ்ய-ஜென்ம ஹைல யார, ஜென்ம சார்தக கரி" (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 9.41). "முதலில், நீங்கள் பரிபூரணராகுங்கள்" என்று சைதன்ய மகாபிரபு கூறுகிறார். நீங்கள் தீயவராக இருந்தால், அதனைச் செய்ய முடியாது. தீயவன் மற்றும் தெய்வீகம். தெய்வீகம் என்றால் ஆன்மீக ரீதியில் முன்னேறியவர், தீயவன் என்றால் ஜட உலக பொருள் ரீதியில் முன்னேறியவர். நாம் தெய்வீகத்தை பரப்புவதால், தீய மனம் படைத்தவர்கள் அதைக் கண்டு பயப்படுகிறார்கள். தீயவர்களுக்கு இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் பிடிக்கவில்லை. (யாரோ வாகனத்தில் செல்லும் போது "ஜெய" கோஷம் இடுகிறார்கள்). இதோ பாருங்கள், தானாகவே அவர்கள் நமக்கு மரியாதை செலுத்துகிறார்கள். இது நமது இயக்கப் பரப்புரைகள் அவர்களைத் தொற்றி விட்டது என்று உணர்த்துகிறது.
|