TA/750428 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"புஷ்ட க்ருʼஷ்ண: பிரபுபாதர், சில நேரங்களில் உங்களுடைய விரிவுரையின் போது நீங்கள் யத மத் தத மத் என்று கூறுவதை கேட்டிருக்கிறேன்?
பிரபுபாதர்: ஆ, யத மத் தத மத். புஷ்ட க்ருʼஷ்ண: அதன் அர்த்தம் என்ன? பிரபுபாதர்: அது விவேகானந்தரின் தத்துவம். "உன்னிடம் எந்த கருத்து இருந்தாலும், அதுவும் நன்றாகவே இருக்கிறது." அப்படியென்றால் நாம் வேறுபட்டாலும் கூட, உன் கருத்து, என் கருத்து, உன்னுடையது நன்று மேலும் என்னுடையது நன்று. அப்படியென்றால் சர்ச்சை இல்லை, அவ்வளவுதான்..." சமரசம் செய்து கொள்வது. நான் இவ்வாறு கூறினால், "உன்னுடைய... உன்னுடைய, நீங்கள் என்ன நினைத்தாலும்..." இது நடந்துக் கொண்டிருக்கிறது. காந்தியை அணுகியபோது அதாவது "உங்களுக்கு முகமதியர்களிடம் அதிகமான செல்வாக்கு இருக்கிறது. நீங்கள் ஏன் இந்த பசு வதையை நிறுத்தக் கூடாது?" காந்தி கூறினார், "இல்லை, அது அவர்களுடை மதம். நான் நிறுத்த முடியாது." அதுதான் யத மத், அதாவது "பசு வதையும் நல்லதே, மேலும் வதை செய்யாமல் இருப்பதும் நல்லதே." (சிரிக்கிறார்) இது அவர்களுடை தத்துவம்."
|
750428 - காலை உலா - விருந்தாவனம் |