TA/750507 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"நீங்கள் ஏன் விலங்குகளை சாப்பிடுகிறீர்கள்? அவர்களும் சாப்பிட வேண்டும். நீங்கள் ஏன் அவர்களை சாப்பிடவிட மறுக்கிறீர்கள் அதுதான் உங்கள் குறைபாடு. நாங்கள் எல்லோரையும் சாப்பிடவிடுகிறோம்—மனிதர்களைமட்டும் அல்ல, ஆனால் விலங்குகள், பறவைகள், மிருகங்கள், அவர்கள் வசதியாக வாழ் வேண்டும், மேலும் எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் அவார்களுடைய உணவை அவை பெற வேண்டும். அதுதான் எங்கள் கம்யூனிசம். ஆனால் எங்கே உங்கள் கம்யூனிசம்? நீங்கள் உங்கள் நாட்டுக்காரர்களை மட்டும்தான் நினைக்கிறீர்கள், அல்லது உங்கள் நாட்டிலும் மனிதர்களை மட்டும் நினைக்கிறீர்கள், மேலும் மற்ற பரிதாபத்திற்குரிய விலங்குகளை, அவர்களால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாததால், படுகொலை கூடத்திற்கு அனுப்புகிறீர்கள். எனவே நீங்கள் ஏன் முதலாளித்துவரிடம் அவர்கள் உங்களை படுகொலை கூடத்திற்கு அனுப்பும் பொழுது எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? நீங்கள் பரிதாபத்திற்குரிய விலங்குகளை படுகொலை கூடத்திற்கு அனுப்புகிறீர்கள். எனவே நீங்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? உங்கள் எதிர்ப்பு முதலாளித்துவர்கள் உங்களை படுகொலை செய்கிறார்கள் என்பதுதான். எனவே, நீங்கள் மற்றவர்களை கொலை செய்தால், நீங்கள் கொலை செய்யப்படுவதை பற்றி ஏன் பயப்படுகிறீர்கள்?" இது சரியா?"
|
750507 - காலை உலா - பெர்த் |