"ஆத்மா நடைமுறைக்கு வருவதில்லை; அது ஏற்கனவே அங்கிருக்கிறது. ஆனால் தற்சமயம் அது வேறுபட்ட உடலை ஏற்றுக் கொண்டிருக்கிறது. எவ்வாறென்றால் உங்களுடைய இந்த ஆடை சந்தையில் கிடைப்பது போல். மேலும் நீங்களும் அங்கிருக்கிறீர்கள், எனவே நீங்கள் அந்த ஆடைய வாங்கி அணிந்துக் கொள்கிறீர்கள். அதேபோல், வேறுபட்ட உடல்கள் ஏற்கன்வே அங்கிருக்கிறது. நீங்கள், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, ஒரு விதமான உடலை ஏற்றுக் கொள்கிறீர்கள், மேலும் அந்த உடலில் தோன்றுகிறீர்கள். அங்கே 8,400,000 வேறுபட்ட உடலின் வடிவங்கள் உள்ளன, மேலும் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, உங்கள் வேலைக்கு ஏற்ப அவற்றில் ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் வேலை செய்துக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோரும் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, வேலைக்கும் மேலும் நட்புகளுக்கும் ஏற்ப, அவர் உடலை உருவாக்குகிறார்."
|