TA/750508b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வெறுமனே எங்கள் மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் போது, சும்மா ஒரு பக்தனாக மாறுங்கள், நமஸ்காரம் அளியுங்கள் நமஸ்கார், மன்-மனா பவ மத்-பக்தோ (BG 18.65), எப்பொழுதும் அவரை நினையுங்கள், மேலும் நீங்கள் அவரிடம் சென்றுவிடுவீர்கள். அது கடினமே அல்ல. பஹவோ ஜ்ஞான-தபஸா மத்-பாவம் ஆகதா꞉ (BG 4.10): "பஹவோ, பலபேர், என்னிடம் வந்தார்கள்." எவ்வாறு? ஜ்ஞான-தபஸா, "அறிவாலும் மேலும் தபஸ்யவாலும், சுத்திகரிக்கப்பட்டு, அவர்கள் என்னிடம் வந்தார்க," கிருஷ்ணர் கூறுகிறார். நீங்க ஏன் ஏமாற்றம் அடைகிறீர்கள்? நீங்கள் போகலாம். கிருஷ்ணர் மனம் திறந்திருக்கிறார். தே (அ)பி யாந்தி பராம்ʼ கதிம் (BG 9.32). ஸ்த்ரிய ஶூத்ர ததா வைஶ்ய: பெண்கள் கூட, குறைந்த அறிவுடையவர்கள், ஶூத்ர, வைஶ்ய, அவர்கள் வந்து அவரை பார்க்கலாம். இதில் சிரமம் எங்கே? நீங்கள் ஒரு தாழ்ந்த இனத்தில் பிறந்திருந்தாலும், நீங்கள் செல்லலாம். கிருஷ்ணர் மனம் அனைவருக்கும் திறந்திருக்கும். நீங்கள் வெறுமனே அந்த தகுதியை அடையுங்கள், அவ்வளவுதான். மேலும் அந்த தகுதி என்ன? மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம்ʼ நமஸ்குரு (BG 18.65): "வெறுமனே எப்போதும் என்னை பற்றி நினையுங்கள், என் பக்தனாகுங்கள், உங்கள் மரியாதையை எனக்கு அளியுங்கள், மேலும் மன்-மனா, என்னை வணங்குங்கள்." அவ்வளவுதான். நான்கு விஷயங்கள்."
750508 - காலை உலா - பெர்த்