TA/750509 - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதார்: நாம் இப்போது எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது அறியாமை—எதிர்கால வாழ்க்கை என்ன என்பது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அது உண்மையே, ஆனால் எதிர்காலத்தைப் பற்றி அவர்கள் அறியாத நிலையில் இருளில் இருப்பதால், அவர்கள் இந்த பொறுப்பற்ற வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆமோக: ஆனால் இந்த நாட்களில் மக்கள் பொதுவாக பள்ளிக்கு செல்வது ஏனென்றால் சட்டத்திற்கு அது தேவைப்படுகிறது. பிறகு அந்த யுகத்தில்...

பிரபுபாதார்: இல்லை, இல்லை. சட்டத்திற்கு அது தேவைப்படுகிற்தொ இல்லையொ, அவர் சில எதிர்கால நம்பிக்கையுடன் பள்ளிக்கு போய் கொண்டிருக்கிறார்கள். எனவே ஒவ்வொரு புத்திசாலி மனிதனும் எதிர்காலத்தைப் பற்றி நினைக்க வேண்டும். ஆனால் அவர்கள் இருளில் வைக்கப்பட்டிருப்பதால், அவர்கல் எல்லோரும் பைத்தியக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிர்கால வாழ்க்கை என்ன என்பதைப் பற்றி தெரியவில்லை. எல்லோரும் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவனுக்கு இறப்பிற்குப் பிறகு எதிர்காலம் என்ன என்பது தெரியவில்லை. அதுதான் அவர்களுடைய அறியாமை. மேலும் பகவத் கீதை ஆரம்பிக்கிறது அதாவது ஒரு குழந்தைக்கு எதிர்காலம் இருப்பது போல், சிறுவனுக்கு எதிர்காலம் இருக்கிறது, ஒரு இளைஞனுக்கு எதிர்காலம் இருக்கிறது, அதேபோல் முதியவருக்கும் எதிர்காலம் இருக்கிறது. எனவே அது அவர்களுக்கு தெரியவில்லை. அதுதான் அவர்களுடைய அறியாமை."

750509 - காலை உலா - பெர்த்