TA/750512b - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: பகவத் கீதையின் அடிப்படை பாரம்பரியத்தில் சொல்லப்பட்டுள்ளது, கிருஷ்ணர் கூறுகிறார், அஹம்ʼ விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான் (BG 4.1): "நான் கூறினேன்." "நான் மனிதன்." "இந்த போக்கிரிகள் எவ்வாறு அருவவாதியை ஏற்றுக் கொள்கிறார்கள்? அவர்கள் ஏன் பகவத் கீதையை படிக்கிறார்கள்?அவர்களுக்கு தனிபட்ட கோட்பாடு இருந்தால், அவர்கள் வித்தியாசமாக... அவர்கள் ஏமாற்றுகிறார்கள். பகவத் கீதை பிரபலமானது; ஆகையினால் அவர்கள் பகவத் கீதையை பயன்படுத்திக் கொள்கிறார்கள் மேலும் ஆளை குறிக்காததில் தள்ளுகிறார்கள். ஆனால் இங்கே பாரம்பரியம் ஆரம்பமாகிறது, அஹம்ʼ விவஸ்வதே யோகம்ʼ. அருவவாதி எங்கே? எனவே அவர்கள் விருப்பத்துடன் ஏமாற விரும்பினால், யார் அவர்களை காப்பாற்ற முடியும்? அவர்கள் பகவத் கீதை படிக்கிறார்கள் மேலும் பகவத் கீதையின் வார்த்தைகளை பின்பற்றவில்லை. பிறகு இதன் அர்த்தம் என்ன?

அமோக: அவர்களுக்கு தெரியாது. அவர்கள் வெறுமனே...

பிரபுபாதர்: அப்படியென்றால் அவர்கள் போக்கிரிகள், அதாவது... நீ பகவத் கீதை படிக்கிறாய். நீ பகவத் கீதையின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். நீ ஏன் மற்றவர்கள் வார்த்தைகளை ஏற்றுக் கொள்கிறாய்? உனக்கு என்ன வேலை இருக்கிறது?

750512 - காலை உலா - பெர்த்