TA/750513 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எளிமையான வாழ்க்கை என்றால் உங்கள் உணவை நீங்களெ உற்பத்தி செய்வது மேலும் உங்கள் ஆடைகளுக்கான துணிகளை நீங்களெ உற்பத்தி செய்வது, அதனால் நீங்கள் அழகாக ஆடை அணிந்து கொள்ளலாம், நீங்களே நன்றாக உணவு உட்கொள்ளுங்கள், உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள், மேலும் பகவானை மகிமைப்படுத்துங்கள். இது ஒரு விதமான வாழ்க்கை. மற்றொறு விதமான வாழ்க்கை, அதாவது 'நாம் பகவானைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. புலன்களை மிகவும் உயர்ந்த திறன்வரை அனுபவித்து ஆனந்தம் அடைவது' எனவே இத்தகைய வாழ்க்கை உங்களை சந்தோஷப்படுத்தாது. நீங்கள் வெறுமனே போராடிக் கொண்டே இருப்பீர்கள். இது ஒரு வகையான வாழ்க்கை. மற்றொறு விதமான வாழ்க்கை, அதாவது மனித வாழ்க்கை பகவானை அறியும் விஞ்ஞானத்திற்காக ஆனது. அதுதான் வேதாந்த தத்துவம். அதாதோ ப்ரஹ்ம ஜிஜ்ஞாஸா (Vedānta-sūtra 1.1.1). இப்போது, பரிணாம செயல்முறையால், நாம் மனித உறுவ வாழ்க்கைக்கு வந்திருக்கிறோம், இது கேள்விக்குரியது, 'என்னுடைய இயல்பான நிலை என்ன? நான் இந்த உடலா, அல்லது நான் வேறு ஏதேனும் ஒன்றா?'"
750513 - உரையாடல் A - பெர்த்