TA/750513b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அவன் இயற்கையால் செவிவழி இழுக்கப்பட்டான், "அட போக்கிரி, நீ இத்தகைய தரம் உடையவனுடன் தொடர்பு கொண்டிருக்கிறாய். நீ இதை செய். நீ இந்த உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும்." அது அவனுக்கு தெரியாது. "இப்போது நீ நாய் போல் நடந்துக் கொண்டாய், நீ இந்த நாய் உடலை ஏற்றுக்கொள்." அதுதான் இயற்கையின் படைப்பு. நீங்கள் சொல்ல முடியாது: "இல்லை, இல்லை, இல்லை, எனக்கு இந்த உடல் வேண்டாம்." இல்லை, நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். "நீ நாய் போல் நடந்துக் கொண்டாய், நீ இந்த நாயின் உடலை எடுத்துக் கொள்." அது அவனுக்கு தெரியாது. அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான், "நான் முழுமையாக இருக்கிறேன்; நான் சுதந்திரமாக இருக்கிறேன்." அது முட்டாள்தனம். இந்த உலகம் முழுமையும், மிக பெரிய விஞ்ஞானிகள் மேலும் தத்துவவாதிகள், அனைவரும் அறியாமையில் இருக்கிறார்கள், மேலும் அவர்கள் இயற்கையால் செவிவழி இழுக்கப்படுகிறார்கள். அது அவர்களுக்கு தெரியாது."
750513 - உரையாடல் B - பெர்த்