TA/750513c உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: உங்களுக்கு பௌதிக உடல் கிடைத்தவுடனே, நீங்கள் துன்பப்பட வேண்டும். இந்த உடலோ, ஆஸ்திரேலியன் உடலோ, அல்லது அமெரிக்கன் உடலோ, அல்லது நாய் உடலோ, அல்லது பூனை உடலோ, அல்லது மரத்தின் உடலோ, எந்த உடலாக இருந்தாலும், பௌதிக உலகில், நீங்கள் துன்பப்பட வேண்டும். முதலாவதாக, இந்த உடலின் பரிமாற்றம், அதுவும் துன்பப்படுவது தான். இந்த பௌதிக உலகில் துன்பம்மட்டும் தான், ஆனால் மக்கள் அறியாமையுடைவர்களாக இருப்பதால், அவர்கள் துன்பத்தை ஆனந்தமாக எடுத்துக் கொள்கிறார்கள்.

தாய்: பிறகு ஏன் அதிகமாக மனித துன்பம் இருக்கிறது?

பிரபுபாதர்: ஏனென்றால் அவன் இந்த ஜட உடலை ஏற்றுக் கொண்டிருக்கிறான்.

தாய்: மேலும் இதனால் அதிகமான மனிதர்கள் துன்பப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு...

பிரபுபாதர்: ஆம், ஜட உடலை ஏற்றுக் கொண்ட காரணத்தால். ஆகையினால் நாம் அனைவரும் இந்த ஜட உடலை ஏற்றுக் கொள்ளும் இந்த செயல்முறையை எவ்வாறு தவிர்ப்பது என்பதில் முயற்சி எடுக்க வேண்டும். அதுதான் நம் ஒரே முயற்சியாக இருக்க வேண்டும். தற்காலிகமான தீர்வு காண்பதில் அல்ல. அது நல்ல தீர்வு அல்ல."

750513 - உரையாடல் C - பெர்த்