TA/750514 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"பிரபுபாதர்: புலன் இன்பம் என்றால் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைவதில்லை. ஒருவர் கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறார் என்ற உடனே, அவருடைய புலன் இன்பம் அனுபவிக்கும் துடிப்பு குறைந்துவிடும். அதுதான் அதன் சோதனை. பக்தி꞉ பரேஶானுபவோ விரக்திர் அன்யத்ர ச (SB 11.2.42). அதன் சோதனை யாதெனில், நீங்கள் எவ்வாறு கிருஷ்ண உணர்வில் முன்னேற்றம் அடைகிறீர்களோ அந்த விகிதத்தில் உங்கள் புலன் இன்பம் குறையும். அதுதான் அதன் சோதனை. எவ்வாறு என்றால் நோய் குணமடைவது என்றால் காய்ச்சல் குறைந்துக் கொண்டு வருகிறது. இதுதான் அதன் சோதனை.
கணேஶ: காய்ச்சல் குறைந்துக் கொண்டு வரவில்லை என்றால் என்ன ஆகும்? பிரபுபாதர்: பிறகு அவன் மஹா மந்திரம் உச்சாடனம் செய்ய முயற்சிக்க வேண்டும், ... பதினாறு சுற்று, அறுபத்து நான்கு சுற்று. அதுதான் முறை. குறைந்தது பதினாறு சுற்று. இல்லையன்றால், ஹரிதாஸ டாகுர 300,000 செய்தது போல். எனவே நீங்கள் அதிகரிக்க வேண்டும். அதுதான் ஒரே பரிகாரம்."
|
750513 - காலை உலா - பெர்த் |