TA/750515 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்கள் போதனை நன்று, இருப்பினும் நீங்கள் அளிக்கும் போதனை நன்மை அளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால் அனைத்தும் நன்மையாக இருந்தால், பிறகு எங்கே ... உங்கள் அறிவுரை தேவைப்படுகிற்து? நீங்கள் ஏதோ ஒன்று போதனை செய்கிறீர்கள். எவ்வாறு என்றால் நாம் அறிவுரை கூறுகிறோம். நாம் அறிவுரை கூறுகிறோம். இது உண்மையில் நன்மை அளிக்கும், அதாவது அவனுக்கு தான் யார் மேலும் வாழ்க்கையின் இறுதி இலக்கு என்ன என்பதை அவன் அறிந்துக் கொள்ள வேண்டும். இது தேவைப்படுகிறது. பௌதிக போதனைக்கு மதிப்பில்லை. அது சைதன்ய-சரிதாம்ருʼதவில் கூறப்பட்டுள்ளது, ஏஇ பால ஏஇ மந்த, ஸப மனோதர்ம (CC Antya 4.176). "இது நல்லது; இது கெட்டது," உண்மையில் இவை அனைத்தும் மனக் குழப்பம். ஆனால் உண்மையான நன்மை யாதெனில்: "அவன் பகவானை மறந்துவிட்டான். அவன் உணர்வை உயிர்ப்பிக்க செய்யுங்கள்." அதுதான் உண்மையான நன்மை. பிறகு அவன் நன்மை, தீமை என்று அழைக்கப்படுவதிலிருந்து மற்றும் அனைத்திலிருந்தும் காப்பாற்றப்படுவான். அதுதான் வேண்டும். இயற்கையில், அனைத்தும் ஒருவனுடைய உணவு, மற்றொறுவனுடைய விஷம். ஆகையினால் அங்கே வேறுபாடு இல்லை—"இது நல்லது; இது கெட்டது," மலம் மிகவும் மோசமானது, உங்களுக்கு அது கெட்ட வாசனை, ஆனால் அது பன்றிகளுக்கு உணவாகும்."
750515 - காலை உலா - பெர்த்