TA/750516 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: "தயவு செய்து ஹரெ கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள்," என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? நீங்கள் உச்சாடனம் செய்யவில்லை என்றால், அது உங்களுடைய இஷ்டம். அதில் எந்த சிரமமும் இல்லை. நீங்கள் இதை ஒப்புக்கொண்டால் அதாவது, "சுவாமீஜீ என்னிடம் சொல்கிறார். நாம் உச்சாடனம் செய்வோம்," நீங்கள் உச்சாடனம் செய்யலாம். ஆனால் நீங்கள் இதை செய்யாவிட்டால், அது உங்களுடைய விருப்பம். அந்த வேலை கடினமானதல்ல. வேலை மிகவும் எளிமையானது. ஒரு குழந்தை கூட அதைச் செய்யலாம். ஆனால் நீங்கள் பிடிவாதமாக, "இல்லை, இல்லை, நான் அதை செய்யமாட்டேன்," என்றால் பிறகு என்ன செய்ய முடியும்? ஏனேசி ஔஷதி மாயா நாஶிபாரோ... உங்களுக்கு இந்த பாடல் தெரியுமா, ஹா? சைதன்யா மஹாபிரபு கூறினார்... உன்னிடம் இந்த கேசட் இருக்கிறதா? ஜீவ் ஜாகோ, ஜீவ் ஜாகோ, கௌரசாந்த போலே.

அமோக: என் சிறு பெட்டியில் இருக்கலாம். ஆமாம்.

பிரபுபாதர்: எனவே அவர் பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கிறார், "இப்போது எழுந்திருங்கள். நீங்கள் எவ்வாறு இன்னமும் அறியாமையில் இருக்கிறீர்கள்? நீங்கள் இந்த மனித வடிவ உடலை பெற்றிருக்கிறீர்கள்; இருப்பினும் நீங்கள் இன்னமும் பூனைகளும் மேலும் நாய்களுமாய் இருக்கிறீர்கள். அது எப்படி? இது மாயாவின் மந்திரம். நீ எழுந்திரு.""

750516 - உரையாடல் A - பெர்த்