TA/750516b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் பெர்த் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"விருந்தினர்(3): எங்களுக்கு பர்மாவில் ராமகிருஷ்ணா என்ற ஒரு சமூக மன்றம் இருக்கிறது. இந்த சமூகத்தை உருவாக்கியவர்கள் மேலும் அவர்கள் கிருஷ்ண கலாச்சரம் பயிற்சி செய்கிறார்கள், அவர்கள் அந்த பொருள்களை அணியமாட்டார்கள், அல்லது அவர்கள் கோவிலில் உச்சாடனம் செய்யமாட்டார்கள் ஆனால் அவர்கள் பலவிதமான பொதுத் தொண்டு செய்வார்கள். இவை இரண்டிற்கும் இடையில் ஏதும் வேறுபாடு...
பிரபுபாதர்: ராமகிருஷ்ண இயக்கம் வேதவழியில் இயங்கவில்லை. இது விவேகானந்தர் உருவாக்கிய கட்டுக் கதையாகும். அது வேதவழியில் வருபவை அல்ல. அவர்கள் ராமகிருஷ்ணா என்று ஒரு பகவானை உருவாக்கியது போல். எனவே அது வேதவழியில் இயங்கவில்லை, அது நீங்கள் ஏதோ ஒரு முட்டாள், போக்கிரியை பகவான் என்று உருவாக்கினீர்கள். விருந்தினர்(3): உங்களுடைய இயக்கம் ஒரு தயாரிப்பு அல்லது வேதவழியில் வந்ததா? பிரபுபாதர்: ஆம், முழுமையாக. விருந்தினர்(3): எனவே நீங்கள் எவ்வாறு... பிரபுபாதர்: எவ்வாறு என்றால் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு, நாங்கள் வேத இலக்கியத்திலிருந்து பதில் கொடுக்கிறோம். நாங்களாகவே பதில் கொடுப்பதில்லை. அதுதான் வேறுபாடு. ஆதாரம் வேத இலக்கியத்திலிருந்து வருவதாகும். நான் இவ்வாறு சொல்லமாட்டேன் அதாவது "என் கருத்துப்படி அது இவ்வாறு இருக்கும்." நாங்கள் அவ்வாறு கூறமாட்டோம்."
|
750516 - உரையாடல் B - பெர்த் |