"தொழில்நுட்ப முன்னேற்றம் நாகரீகம் அல்ல. அது உக்ர அறிவின் முன்னேற்றம். உண்மையான நாகரீகம் என்பது ப்ரஹ்மன் அறிவில் முன்னேற்றம். அங்கே ப்ராஹ்மணஸ் இருந்தால், அது முன்னேற்றம். இது முன்னேற்றம் அல்ல, ஏனென்றால் முன்னேற்றம் என்றால் என்னவென்று அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு அறிவில்லை அதாவது "நான் இறக்க வேண்டும், மேலும் இறந்த பிறகு நான் மற்றொறு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும்." அவர்களுக்கு இது தெரியாது. இந்த உடலில் இருக்கும் வரை, அவர்கள் மிக வசதியான நிலையில் இருக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த உடலுக்குப் பிறகு, அவன் மற்றொறு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும், இது அவர்களுக்கு தெரியாது. எனவே இந்த தொழில்நுட்பம் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகும்? இந்த வாழ்க்கையில், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் நீங்கள் மிக வசதியாக வாழ்ந்து, மேலும் அடுத்த பிறவியில் நீங்கள் நாயாக பிறந்தால், எங்கே அந்த முன்னேற்றம்? அது அவர்களுக்கு தெரியாது."
|