"ஒருவர் இதை புரிந்துக் கொள்ளும் போது உண்மையாண பக்தி ஆரம்பமாகிறது அதாவது, "பகவான் மிக உயர்ந்தவர், இந்த உலகத்திற்கு நான் பயனற்று தொண்டு செய்கிறேன். ஏன் பகவானுக்கு சேவை செய்யக் கூடாது?" அதுதான் தாஸ்யம், என்று அழைக்கப்படுகிறது, பக்தி செயல் ஆரம்பமாகிறது. நாம் பௌதிக உலகில் சுறுசுறுப்பாக செயல்படுகிறோம். அது பயனற்றது, வெறுமனே நேரத்தை வீணடிப்பது, மேலும் ஒருவர் மறுபறப்பிலும் இறப்பிலும் சிக்கவைக்கிறது. பௌதிக செயல்கள். இதுதான் ப்ரவ்ருʼத்தி-மார்க என்று அழைக்கப்படுகிறது. ப்ரவ்ருʼத்தி-மார்க என்றால் புலன் இன்பம். மேலும் புலன் இன்பத்திற்கு நாம் பல வேறுபட்ட உடல்களை ஏற்றுக் கொள்ள வேண்டியிறுக்கிறது, 8,400,000. அனைவரும் புலன் இன்பத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். புலி சுறுசுறுப்பாக இருக்கிறது, பன்றி சுறுசுறுப்பாக இருக்கிறது, நாய் சுறுசுறுப்பாக இருக்கிறது. மனிதனும், அவன் புலி, பன்றி, மேலும் நாய் போல சுறுசுறுப்பாக இருந்தால், பிறகு அவன் மீண்டும் அதே இனமாக வருவான்."
|