TA/750519b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பத்திரிகையாளர்: இந்த கடவுளின்மையைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்...

பிரபுபாதர்: கடவுளின்மை என்பது கடவுள் யார் என்பதை பற்றி அறியாதவனாகும். மேலும் என்னவென்றால் நீங்கள் என்னைப் பற்றி அறிந்திருந்து, என்னிடம் வந்திருக்கிறீர்கள். நான் ஒரு மனிதன், நான் பேசிக் கொண்டிருக்கிறேன், நான் பல புத்தகங்கள் எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். இது என்னைப் பற்றி தெரிந்துக் கொண்டிருப்பது. அதேபோல், ஒருவர் பகவான் என்றால் யார், அவருடைய அம்சம் என்ன, அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், என்ன கற்பிக்கிறார், மேலும் என்ன சட்டம் கொடுக்கிறார் என்று ஒருவர் அறிந்திருக்க வேண்டும். இதுதான் பகவானைப் பற்றி அறிந்திருப்பதாகும். வெறுமனே "ஓ, சரி பகவான் இருக்கிறார். அவர் அவருடைய இடத்திலேயே இருக்கட்டும், மேலும் நான் விரும்புவதை செய்ய அன்னை அனுமதிக்கட்டும்," அது பகவானை புரிந்துக் கொண்டதாகாது. உங்கள் தந்தையை பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்வதைப் போல் பகவானைப் பற்றியும் அறிந்துக் கொள்ள வேண்டும். உங்கள் தந்தையின் சொத்துக்கள் மேல் ஆர்வம் கொண்டிருந்தால், பிறகு உங்கள் தந்தை யார் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்."

750519 - Interview - மெல்போர்ன்