"இந்தியாவில், நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், மோசமான இடங்கள், அது காகங்கள் வருகை புரிந்த இடங்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது, ந தத் வசஶ் சித்ர-பதம்ʼ ஹரேர் யஶோ ப்ரக்ருʼணீத கர்ஹிசித், தத் வாயஸம்ʼ தீர்தம் (SB 1.5.10). கிருஷ்ணரைப் பற்றி விவரிக்காத இலக்கியம், அதுதான் காகங்களுக்கான இடம். அங்கே செக்ஸ் இலக்கியம் இருக்கிறது, அது காகங்களால் அனுபவிக்கப்படுகிறது, மேலும் இந்த பாகவதம் அன்னபட்சிகளால் அனுபவிக்கப்படுகிறது. அதுதான் அதன் வேறுபாடு. காகங்களின் இலக்கியம், மேலும் அன்னபட்சிகளின் இலக்கியம் பரமஹம்ʼஸ. பரமோ நிர்மத்ஸராணாம்ʼ வாஸ்தவம்ʼ வஸ்து வேத்யம் அத்ர (SB 1.1.2). இந்த பௌதிக உலகில் இருக்கும் அனைவரும், பொறாமை நிறைந்தவர்கள். அவர்கள் வேலை பொறாமை கொள்வதாகும். நான் உன்னை கண்டு பொறாமை கொள்வது; நீ என் மீது பொறாமை கொள்வது. இதுதான் பௌதிக உலகம். மேலும் இந்த பரமஹம்ʼஸஸ், வைஷ்ணவ, அவர்கள் இரக்கமுள்ளவர்கள், கருணைமிக்கவார்கள். "ஆ, இந்த வீழ்ந்த ஆத்மாக்கள் கிருஷ்ணரை வேண்டி துன்பப்படுகிறார்கள். நாம் பிரசங்கம் செய்வோம்." இதுதான் வேற்றுமை."
|