TA/750520 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெல்போர்ன் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இறுப்பினும், நான் எந்த தொழிலையும் நாடவில்லை, "எங்களுக்கு சில சேவைகளை கொடுங்கள் எங்கள் பராமரிப்பு..." இல்லை, நாங்கள் அதை செய்யமாட்டோம். நாங்கள் ஒருபோதும் அதை செய்யமாட்டோம். நான் தனியாக இருந்த போது, நான் அதை செய்துக் கொண்டிருக்கவில்லை. நான் தனியாக வாழ்ந்துக் கொண்டிருந்தேன். எனக்கு வருமானம் இல்லை, நண்பன் இல்லை, தங்குமிடம் இல்லை. என் வீட்டைவிட்டு வெளியேறியதிலிருந்து, 1954லில் இருந்து, என்னை எவரும் பராமரிக்கவில்லையே என்று நான் கவலைப்பட்டதில்லை. மேலும் அங்கே வளங்கள் இல்லை, நிரந்தரமான வருமானம், அந்த மாதிரி எதுவும் இல்லை. நான் கிருஷ்ணரை சார்ந்திருந்தேன். அதேபோல், இந்த சமூகம் முழுமைக்கும், நாங்கள் தினமும் பத்தாயிரம் ஆண்களுக்கு உணவு அளிக்கின்றோம். எங்களுக்கு சுமார் நூறு மையங்கள் இருக்கின்றன. மேலும் நாங்கள் பராமரிக்கப்படுகிறோம் ... ஐரோப்பியர், அமெரிக்கர் தரநிலையில், அலைந்து திரிபவர்கள் தரநிலையில் அல்ல. இருப்பினும், எங்களுக்கு நிரந்தரமான வருமானம் இல்லை. கிருஷ்ணரை சார்ந்திருக்கிறோம். அவர் விரும்பினால், எங்களுக்கு உணவு அளிப்பார்; அவர் விரும்பினால், நாங்கள் பட்டினி கிடப்போம். இது தான் ப்ராஹ்மின், நடைமுறை. மேலும் "இப்போது நான் அனைத்து பட்டமும் பெற்றிருக்கிறேன், மேலும் எனக்கு ஒரு நல்ல முதலாளி கிடைத்தாலே தவிர, பிறகு நான் ஒரு தெரு நாயாவேன்." (டாக்டர் கோப்லண்ட் சிரிக்கின்றார்) அதுதான் ஶூத்ர."
750520 - உரையாடல் - மெல்போர்ன்