"இறப்பு என்றால் இந்த உடலின் மாற்றம். நவீன நாகரீகத்தில், அவர்களுக்கு இது தெரியாது. அதுதானஆன்மீக அறிவியலின் முதல் புரிதல், அதாவது நாம் நம் உடலை மாற்றிக் கொள்கிறோம். நான் ஆன்மீக ஆன்மா, நாம் அனைவரும், ஆன்மீக ஆன்மா, விலங்குகளும் மேலும் மரங்கள், மற்றும் செடிகளும் கூட—எவ்வகையான உயிர் வாழிகளும். அங்கே 8,400,000 வேறுபட்ட வடிவங்களில் உயிர் வாழிகள் இருக்கின்றன. அவர்கள் அனைவரிலும், மனித வடிவம் பெற்றவர்கள் சிறந்தவர்களாக கருதப்படுகிறார்கள். சிறந்தது என்றால் அதற்கு... மனிதர்களுக்கு முதிர்சியடைந்த உணர்வு இருக்கிறது. முதிர்சியடைந்த உணர்வு என்றால் அவர்களுக்கு கடந்த காலம், எதிர் காலம், நிகழ் காலம் என்பது என்னவென்று புரிந்துக் கொள்ள முடியும். குறிப்பாக அவருடைய நிலையை ஒரு ஆன்மீக ஆன்மாவாக புரிந்துக் கொள்வது, பகவானை புரிந்துக் கொள்ள, பகவானுடன் அவனுடைய உறவு என்ன என்பதை புரிந்துக் கொள்ள, மேலும் அந்த உறவு முறையில் அவன் என்ன செய்ய வேண்டும்—இந்த விஷயங்கள் மனித வடிவ வாழ்க்கையில் புரிந்துக் கொள்ள முடியும், மற்றபடி இல்லை."
|