TA/Prabhupada 0790 - பிறர் மனைவியோடு எவ்வாறு நட்பு கொள்வது, பிறர் பணத்தை எவ்வாறு தந்திரமாய் எடுத்துக்கொள்
(Redirected from TA/Prabhupada)
Lecture on SB 6.1.56-57 -- Bombay, August 14, 1975
கல்வி என்றால் மனிதனாக மாற வேண்டும். சாணக்ய பண்டிதா- அவர் ஒரு அரசியல்வாதியாக இருந்தபோதிலும், ஆனால் ப்ராஹ்மண - யார் படித்தவர் என்றும் அவர் கூறுகிறார். பண்டிதா. பிராமணர் பண்டிதா என்று அழைக்கப்படுகிறார். எனவே பண்டிதரின் அடையாளம் என்ன? அவர் சுருக்கமாக:
- மாத்ரு-வத் பர-தாரேஷு
- பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ர-வத்
- ஆத்ம-வத் ஸர்வ-பூதேஷு
- ய: பஷ்யதி ஸ பண்டிதா:
பண்டிதர் என்றால் மாத்ரு-வத் பர-தாரேஷு "எல்லா பெண்களையும் தாயாக ஏற்றுக்கொள்வது," பர-தாரேஷு. தாரா என்றால் மனைவி, பரா என்றால் மற்றவர்கள் என்று பொருள். தனது சொந்த மனைவியைத் தவிர, மற்ற எல்லா பெண்களையும் அவர் அவர்களை தாயாக எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, இப்போதும் இந்து சமுதாயத்தில், ஒவ்வொரு பெண்ணும் அறியப்படாத ஆணால் “அம்மா" என்று அழைக்கப்படுகிறார்கள். ஒரு நபரை தெரியவில்லை என்றால் பரவாயில்லை. அவர் வேறொரு பெண்ணுடன் முதலில் பேசலாம், அவரை, "அம்மா," என்ற பின்னர். யாரும் புண்படுத்த மாட்டார்கள். இது ஆசாரம். அதை சாணக்ய பண்டிதர் கற்பிக்கிறார். மாத்ரு-வத் பர-தாரேஷு. பெண்களை "தாயாக" எடுத்துக் கொள்ள வேண்டும். பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ர-வத்: மற்றும் பிறரின் சொத்து தெருவில் கிடக்கும் சில கூழாங்கற்களை போல நினைக்க வேண்டும்- அதை யாரும் கவனிப்பதில்லை. சில கூழாங்கற்கள், சில கற்கள் தெருவில் வீசப்பட்டால், அதை யாரும் கவனிப்பதில்லை. அது குப்பை. எனவே மற்றவர்களின் சொத்தை யாரும் தொடக்கூடாது.
இப்போதெல்லாம் கல்வி என்பது மற்றவர்களின் மனைவியுடன் நட்பை ஏற்படுத்துவது, மற்றும் தந்திரங்களின் மூலம் மற்றவர்களின் பணத்தை எவ்வாறு எடுத்துச் செல்வது. இது கல்வி அல்ல. கல்வி இங்கே இருக்கிறது: மாத்ரு-வத் பர-தாரேஷு பர-த்ரவ்யேஷு லோஷ்ட்ர-வத், ஆத்ம-வத் ஸர்வ-பூதேஷு. சர்வ-போதேசு: அனைத்து உயிரினங்களிலும்... 8,400,000 வெவ்வேறு வகையான உயிர்வாழிகள் உள்ளன. புல் ஒரு உயிரினம், மற்றும் பிரம்மாவும் ஒரு உயிரினம். எனவே ஒரு பண்டிதா அனைவரையும் உயிரினமாக ஏற்றுக்கொள்கிறார், மேலும் அவர் அவர்களை கையாளுகிறார், ஆத்ம-வத்: நான் என்ன வலி மற்றும் இன்பம் உணர்கிறேனோ, மற்றவர்களையும் அதே உணர்வால் நான் கையாள வேண்டும்." எனவே ... நவீன நாட்களிலில் குடியுரிமை என்பது மனிதர்கள் என்று பொருள். ஆனால் உண்மையில் விலங்குகளும் குடியுரிமை கொண்டது. குடிமகன் என்றால் ஒருவர் அவர்களின் வரையறையின்படி ஒரே நாட்டில் பிறக்கிறார். "குடிமகன்" சொல் வேத இலக்கியங்களில் ஒருபோதும் காணப்படவில்லை. இது நவீன கண்டுபிடிப்பு. எனவே இங்கு ஆத்ம-வத் ஸர்வ-பூதேஷு. ஒருவர் குடிமகனா இல்லையா என்பது முக்கியமல்ல. ஸர்வ-பூதேஷு. இங்கேயும் உள்ளது. ஸர்வ-பூத-ஸுஹ்ருத். ஸுஹ்ருத், நண்பர், நலம் விரும்பி, ஸர்வ-பூத. எனது உறவினர்களுக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களுக்கோ மட்டுமே நான் ஏன் யோசிக்க வேண்டும்? அது க்ருபண, கருமி. அனைவருக்கும் நல்லது செய்வதற்காக ஒரு பரந்த எண்ணம் கொண்ட ப்ராஹ்மணர் ஈடுபட வேண்டும்.
எனவே சைதன்ய மஹாபிரபுவின் நோக்கம் ப்ருதிவீதே ஆசே யத நகராதி-க்ராம (சை.பா. அந்த்ய-கண்டா 4.126) "உங்கள் பிரசங்கத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்" என்று சைதன்யா மஹாபிரபு உங்கள் சமூகத்திற்குள் அல்லது உங்கள் நாட்டிற்குள்." என்று ஒருபோதும் அறிவுறுத்தவில்லை. ப்ருதீவிதே ஆசே யத நகராதி-க்ராம: என்று கேட்கிறார்: "பல கிராமங்களும் நகரங்களும் மேற்பரப்பில் இருப்பதால் ... " (பக்கத்தில்:) அது சரி. தொந்தரவு செய்ய வேண்டாம். ஸர்வத்ர ப்ரசார ஹைபே மோர நாம. இதுதான் பணி. இது வேத அறிவு. ஸர்வ-பூத-ஸுஹ்ருத்.