TA/Prabhupada 0010 - கிருஷ்ணரை பாவனை செய்ய முயலாதீர்கள்



Lecture on SB 7.9.9 -- Mayapur, February 16, 1976

கிருஷ்ணர்... இந்த பதினாராயிரம் மனைவியர்கள், எவ்வாறு மனைவியர்கள் ஆனார்கள்? உங்களுக்கு இந்த கதை தெரியுமா, அதாவது பதினாராயிரம் அழகிய, நான் சொல்வது என்னவென்றால், அரசனின் மகள்கள் அசுரனால் கடத்தப்பட்டார்கள். அந்த அசுரனின் பெயர் என்ன? பெளமாசுரன், (நரகாசுரன்) அல்லவா? ஆம். அவர்கள் கிருஷ்ணரிடம் வேண்டினார்கள் "நாங்கள் இந்த அயோக்கியனால் கடத்தப்பட்டு வருந்திக் கொண்டிருக்கிறோம். கருணை கொண்டு எங்களைக் காப்பாற்றுங்கள்." அதனால் கிருஷ்ணர் அவர்களைக் காப்பாற்ற வந்தார். பெளமாசுரன் கொல்லப்பட்டான், பெண்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஆனால் விடுதலைப் பெற்றபின்னரும் அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். கிருஷ்ணர் அவர்களிடம் கூறினார், "இப்பொழுது நீங்கள் வீட்டிற்கு உங்கள் தந்தையிடம் செல்லலாம்." அவர்கள் சொன்னார்கள் "நாங்கள் கடத்தப்பட்டவர்கள், அதனால் எங்களுக்கு திருமணம் நடக்காது." இந்தியாவில் இன்றும் இந்த சம்பிரதாயம் நடைமுறையில் உள்ளது. ஒரு இளம்பெண் வீட்டைவிட்டு வெளியேச் சென்று ஓரிரண்டு நாட்கள் ஆனால், அவளை ஒருவரும் திருமணம் செய்துக் கொள்ளமாட்டார்கள். அவளை ஒருவரும் திருமணம் செய்துக் கொள்ளமாட்டார்கள். அவள் தவறான வழியில் சென்றவளாக கருதப்படுவாள். இது இன்றளவும் இந்தியர்களின் ஒழுங்கமைப்பு. ஆக அவர்கள் பல நாட்களாக, பல வருடங்களாக கடத்தி வைக்கப்பட்டிருந்தனர், அதனால் அவர்கள் கிருஷ்ணரிடம் முறையிட்டார்கள், "எங்கள் தந்தையும் எங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார், வேறுயாரும் எங்களை திருமணம் செய்துக் கொள்ள சம்மதிக்கமாட்டார்கள்." அதன்பின் கிருஷ்ணருக்கு புரிந்தது, "இவர்களின் நிலைமை மிக ஆபத்தானது. விடுதலைப் பெற்ற பின்னரும் அவர்களுக்கு போக எங்கும் இடமில்லை." பிறகு கிருஷ்ணர்... மிகுந்த கருணையுள்ளவர், பக்த-வத்ஸல. அவர் விசாரித்தார், "உங்களுக்கு என்ன வேண்டும்?" அதற்கு..... அவர்கள் சொன்னார்கள் "தாங்கள் எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் எங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை." கிருஷ்ணர் உடனடியாக: "சரி வாருங்கள்." இதுதான் கிருஷ்ணர். மற்றும் அவருடைய பதினாராயிரம் மனைவிமார்களும் ஒரே இல்லத்தில் வைக்கப்படவில்லை. அவர் உடனடியாக பதினாராயிரம் அரண்மனைகளை உருவாக்கினார். ஏனெனில் மனைவியாக அவர் ஏற்றுக்கொண்டதால் அவர்களை மனைவியாக ஆதரிக்க வேண்டும், தன்னுடைய ராணியாக பார்த்தாரே ஒழிய, "அவர்கள் வேறு வழியில்லாமல், என்னிடம் பாதுகாப்பு தேடி வந்தவர்கள். நான் அவர்களை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்." அப்படி எண்ணவில்லை. மிகுந்த மதிப்புடன் ராணியாக, கிருஷ்ணரின் ராணியாக. கிருஷ்ணர் மறுபடியும் சிந்தித்தார், அதாவது பதினாராயிரம் மனைவியர்கள்... ஆக நான் தனியாக, ஓர் உருவமாக இருந்தால் என் மனைவியர்கள் என்னை சந்திக்க முடியாது. கணவரைக் காண்பதற்கு ஒவ்வொருவரும் பதினாராயிரம் நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்படி இருக்கக்கூடாது." அவர் தன்னைத்தானே பதினாராயிரம் கிருஷ்ணராக விஸ்தாரமாக்கிக் கொண்டார். இதுதான் கிருஷ்ணர். அறிவற்றவர்கள் கிருஷ்ணரைப் பெண் பித்தர் என்று குற்றம் சாற்றுகிறார்கள். இது உங்களைப் போன்று அல்ல. உங்களால் ஒரு மனைவியை கூட சரியாக ஆதரிக்க முடியவில்லை. ஆனால் அவர் பதினாராயிரம் மனைவியர்களை, பதினாராயிரம் அரண்மனைகளில் வைத்து ஆதரித்தார் அதுவும் பதினாராயிரம் வடிவங்களாக விஸ்தரித்து. எல்லோருக்கும் மனநிறைவானது. இதுதான் கிருஷ்ணர். கிருஷ்ணர் என்றால் என்ன என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். போலி தனமாக கிருஷ்ணரைப் பொல் பாவனை செய்யாதீர்கள். முதலில் கிருஷ்ணரைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.