TA/Prabhupada 0018 - உறுதியான நம்பிக்கையுடன் குருவின் கமலப் பாதங்களில் சரணடைதல்



Lecture on SB 6.1.26-27 -- Philadelphia, July 12, 1975

பிரபுபாதர்: ஆக நாம் இந்த நேரத்தை, மறுபடியும் மறுபடியும் இறந்து, வேறொரு உடலை பெறும் வாழ்க்கையிலிருந்து விடுபட தீர்வு காண்பதற்காக பயன்படுத்த வேண்டும் தகுதியுள்ள குருவிடம் செல்லாமல் அவர்களால் எப்படி இதை புரிந்துகொள்ள முடியும்? ஆகையால் சாஸ்திரம் கூறுகிறது, தத்-விக்ஞானார்த்தம்: "உங்கள் வாழ்க்கையின் உண்மையான பிரச்சனையைத் தெரிந்துகொள்ள விருப்பம் இருந்தால், மேலும் கிருஷ்ண உணர்வை அடைவது எப்படி, எப்படி மரணமில்லாத நித்தியமான வாழ்வை அடைவது, எப்படி முழுமுதற் கடவுளின் திருவீட்டிற்கு திரும்பி செல்வது என்பதையெல்லாம் தெளிவாக புரிந்துக்கொள்ள விருப்பம் இருந்தால், குருவை அணுகித் தான் ஆகவேண்டும்." மேலும் குரு என்பவர் யார்? அது மிக எளிதாக விளக்கப்பட்டிருக்கிறது. "நான் சொன்னபடி செய்து, எனக்கு தட்சிணை செலுத்தினால், உங்களுக்கு ஆனந்தம் கிடைக்கும்." இதைப்போன்ற கருத்துகளை ஒரு குரு என்பவர் ஒருபோதும் உருவாக்கமாட்டார். அது குரு அல்ல. அது வெறும் பணம் சம்பாதிப்பதற்கு ஒரு வழி தான். இங்கே கூறப்பட்டிருப்பது என்னவென்றால், மூடா, அதாவது முட்டாள்களின் அறியாமை சொர்க்கத்தில் வாழ்பவர்கள் எல்லாம், தங்கள் சொந்த கருத்துக்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள், அஜாமிளனைப் போல்... ஒருவன் தானாகவே, "இது தான் என் கடமை," என்பான், வேறொருவன் வேறொன்றை... அவன் வாஸ்தவத்தில் ஒரு முட்டாள். உன் கடமை என்னவென்பதை குருவிடமிருந்தது தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் பாடுகிறீர்கள், குரு-முக-பத்ம-வாக்ய சித்தேதே கொரியா ஐக்ய ஆர நா கோரிஹோ மனே ஆஷா. இதுதான் வாழ்க்கை. இதுதான் வாழ்க்கை. குரு-முக-பத்... தகுதியுள்ள அங்கீகாரம் பெற்ற குருவை ஏற்று, மேலும் அவர் எப்படி ஆணை இடுகிறாரோ அப்படி செயல்புரியவேண்டும். அதுதான் உங்கள் வாழ்க்கையின் வெற்றி. ஆர் நா கோரிஹோ மனே ஆஷா. நீ அயோக்கியன், நீ வேறு எந்த ஆசையும் வைத்திருக்காதே. நீங்கள் தினமும் பாடுகிறீர்கள் அல்லவா? ஆனால் உங்களுக்கு அதன் அர்த்தம் புரிகிறதா? அல்லது வெறும் பாடுவதுடன் சரியா? அதன் அர்த்தம் என்ன? யாரால் விளக்க முடியும்? ஒருவருக்கும் தெரியாதா? ஆம், அதன் அர்த்தம் என்ன? பக்தர்: "எனது ஒரே ஆசை என்னவென்றால், என் ஆன்மீக குருவின் திருவாய்மொழியால் என் உள்ளம் தூய்மையடைய வேண்டும். இதைத் தவிர எனக்கு வேறு எந்தவிதமான ஆசையும் இல்லை." பிரபுபாதர்: ஆம், இதுதான் கட்டளை. குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கொரியா ஐக்ய. சித்த என்றால் உணர்ச்சிநிலை அல்லது இதயம். "நான் இதை மட்டுமே செய்வேன், அவ்வளவு தான். என் குரு மஹாராஜ்ர் என்னிடம் சொல்லிவிட்டார்; நான் இதைச் செய்தே தீருவேன்." சித்தேதே கொரியா ஐக்ய, ஆர் நா கோரிஹோ மனே ஆஷா. ஆக அந்த பெருமை என்னை சேராது, ஆனால் தங்களின் ஆசைப்படி தான் நான் செய்தேன் எனக் கூறலாம். ஆக, என் தெய்வ சகோதரர்களைவிட ஏதேனும் சிறிதளவில் நான் கண்ட வெற்றிக்கு, இதுதான் காரணம். எனக்கு தகுதி இல்லை, இருப்பினும் நான் ஏற்றுக் கொண்டேன், என் குருவின் வார்த்தைகளை என் வாழ்க்கையின் உயிர்மூச்சாக ஏற்றுக் கொண்டேன். ஆக இது உண்மையே. குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கொரியா ஐக்ய. எல்லோரும் அதைச் செய்ய வேண்டும். ஆனால் இதில் மனதிற்கு தோண்றியப்படி மாற்றங்களை செயதால், பிறகு அவன் கதி அதோகதி தான். தன்னிச்சையான கூட்டல், கழித்தல், மாற்றங்கள் எல்லாம் கூடாது. குருவை அணுகவேண்டும் - குரு என்றால் கடவுளின், அதாவது கிருஷ்ணரின் நம்பகரமான தொண்டர். பிறகு, இறைவனுக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை அவரிடமிருந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆனால் நீங்கள் தான்தோன்றித்தனமாக, "நான் என் குருவைவிட மிகுந்த அறிவாளி, மற்றும் என்னால் தன்னிச்சையான சேர்த்தல் அல்லது மாற்றத்தைச் செய்ய முடியும்," என்று நினைத்தால் உங்களின் ஆன்மீக வாழ்வு முடிந்துவிடும். ஆக அதுதான் ஒரேயொரு... இப்பொழுது, தொடர்ந்து பாடுங்கள். பக்தர்: ஸ்ரீ-குரு-சரணே ரதி, எய் ஸெ உத்தம-கதி. பிரபுபாதர்: ஸ்ரீ-குரு-சரணே ரதி, ஏய் ஸே, உத்தம-கதி. உண்மையான முன்னேற்றத்தை அடைய விருப்பம் இருந்தால், குருவின் தாமரைப்பாதங்களின்மீது உறுதியான நம்பிக்கையுடன் இருக்கவேண்டும். பிறகு? பக்தர்: ஜெ ப்ரஸாதே பூரே ஸர்வ ஆஷா. பிரபுபாதர்: ஜெ ப்ரஸாதே பூரே ஸர்வ ஆஷா. யஸ்ய ப்ரஸாதாத்... வைஷ்ணவ சித்தாந்தம் அனைத்திலும் இது மையமான ஒரு கற்பித்தல். ஆக அவ்வாறு செய்யாவிட்டால், நாம் மூடர்களாகவே இருப்போம், இது அஜாமிள-உபாக்யானத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அக இன்று நாம் இந்த பதத்தைப் படிக்கின்றோம், ச எவம் வர்தமான: அக்ஞா: . மறுபடியும் அவர் கூறுகிறார். மறுபடியும் வியாசதேவர் கூறுகிறார், "இந்த பாதகன் அந்த சூழ்நிலையில், நாராயண என்ற பெயர் கொண்ட தன் மகனின் சேவையில் தன்நிலை மறந்தான்." அவனுக்குத் தெரியவில்லை... "என்ன இது அர்த்தமற்ற நாராயண?" அவனுக்கு அவனுடைய மகனைத் தான் தெரியும். ஆனால் நாராயணரோ கருணை மிக்கவர். அவன் தொடர்ந்து தன் மகனை அழைத்திருந்த்தால், "நாராயணா, தயவுசெய்து இங்கே வா, நாராயணா, தயவுசெய்து இதை எடுத்துக்கொள்," "அவன் நாராயண என்ற என் நாமத்தை தான் ஜபித்துக் கொண்டிருக்கிறான்" என்று கிருஷ்ணர் எடுத்துக் கொண்டார். கிருஷ்ணர் அவ்வளவு கருணை மிக்கவர். "நான் நாராயணரிடம் செல்கிறேன்." என்பது ஒருபோதும் அவனது நோக்கம் இல்லை. அவன் வெறும் பாசத்தால் தன் மகனின் அருகே இருக்க விரும்பினான். ஆனால் நாராயணரின் திருநாமத்தை ஜபிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. இது அவனுடைய அதிர்ஷ்டம். எனவே தான், இதன்படி, நாம் பெயர்மாற்றம் செயகிறோம். ஏன்? ஏனென்றால் கிருஷ்ணருக்கு பணிபுரிவதே ஒவ்வொரு பெயரின் நோக்கமும் ஆகும். உதாரணமாக உபேந்திரன் என்ற பெயர். உபேந்திரன் என்றால் வாமனதேவர். ஆக நீங்கள், "உபேந்திர, உபேந்திர," அல்லது இதைப்போன்ற பெயரை அழைத்தால், அதற்கு அந்த திருநாம ஜபத்தின் பலன் உண்டு. அது பின்பு விளக்கப்படும்.