TA/Prabhupada 0022 - கிருஷ்ணருக்கு பசி எடுக்காது



Lecture on SB 1.8.18 -- Chicago, July 4, 1974

கிருஷ்ணர் சொல்கிறார், "என் பக்தர்கள், அன்புடன்," யோ மே பக்த்யா ப்ரயச்சதி. கிருஷ்ணருக்கு பசி இல்லை. கிருஷ்ணர் பசியினால் உங்களுடைய காணிக்கையை ஏற்றுக்கொள்ள உங்களிடம் இங்கு வரவில்லை. இல்லை. அவருக்குப் பசி இல்லை. அவர் தன்னிலேயே பூரணமானவர், அத்துடன் ஆன்மீக உலகில் அவர் உபசரிக்கப்படுகிறார், லக்க்ஷமி-ஸஹஸ்ர-ஷத-ஸ்ம்ப்ரம சேவ்யமானம், அவர் பல நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான அதிர்ஷ்ட லக்க்ஷமிகளால் செவிக்கப்படுகிறார். ஆனால் கிருஷ்ணர் மிகவும் கருணையுள்ளவர். ஏனென்றால் நீங்கள் கிருஷ்ணரை தீவிரமாக நேசிப்பவராக இருந்தால், அவர் உங்களுடைய இலையையும் மலரையும் ஏற்றுக்கொள்ள இங்கே இருப்பார். நீங்கள் மிகுந்த ஏழ்மையான நிலையில் இருந்தாலும், உங்களால் சேகரிக்க முடிந்ததை அவர் ஏற்றுக் கொள்வார். ஒரு சிறிய இலையோ, சிறிதளவு தண்ணீரோ, அல்லது ஒரு சிறிய மலரோ. உலகின் எந்தப் பகுதியிலும், யாரவேண்டுமானாலும் இவையை சேகரித்து கிருஷ்ணருக்கு அற்பணிக்கலாம். "கிருஷ்ண, உங்களுக்கு அர்ப்பணிக்க இந்த ஏழைக்கு சொந்தமானது ஒன்றுமே இல்லை. கருணைக் கூர்ந்து இதை ஏற்றுக் கொள்ளுங்கள்." கிருஷ்ணர் ஏற்றுக் கொள்வார், கிருஷ்ணர் சொல்கிறார், தத் அஹம் அஷ்னாமி, "நான் உண்பேன்." ஆக முதன்மையானது பக்தி, பாசம், அன்பு. இங்கே 'அலக்ஷ்யம்' என்று கூறப்பட்டிருக்கிறது. கிருஷ்ணர் கண்ணுக்குப் புலப்படுவதில்லை, இறைவன் கண்ணுக்குப் புலப்படுவதில்லை, ஆனால் அவர் மிகுந்த கருணையுள்ளவர். அதனால் அவர் உங்கள் முன் தோன்றியிருக்கிறார், உங்களுடைய ஜட கண்களுக்குக் காட்சி அளிக்கிறார். கிருஷ்ணர் இந்த ஜட உலகினுள், ஜட கண்களுக்குப் புலப்படமாட்டார். கிருஷ்ணரின் அம்சங்கள் போல். நாமும் கிருஷ்ணரின் அம்சங்கள் தான், எல்லா உயிர் இனங்களும் அவர் அம்சங்கள் தான், ஆனால் நம்மால் ஒருவரையொருவர் பார்க்கமுடிவதில்லை. உங்களால் என்னைப் பார்க்க முடியாது, நான் உங்களைப் பார்க்கவில்லை. "இல்லை, நான் உங்களைப் பார்க்கிறேன்." என்றால், நீங்கள் எதை பார்க்கிறீர்கள்? நீங்கள் என் உடலைப் பார்க்கிறீர்கள். பிறகு ஆத்மா உடலைவிட்டு போனபின், நீங்கள் ஏன் "என் தந்தை போய்விட்டாரே" என அழுகிறீர்கள்? தந்தை ஏன் போய்விட்டார்? தந்தை இங்கு தானே படுத்திருக்கிறார். அப்போது நீங்கள் பார்த்தது என்ன? நீங்கள் உங்கள் தந்தையின் பிணத்தைப் பார்த்திருக்கிறீர்கள், உங்கள் தந்தையை அல்ல. ஆக உங்களால் கிருஷ்ணரின் ஒர் அணுவைக்கூட, ஆத்மாவைக்கூட பார்க்க முடியாத பட்சத்தில், எவ்வாறு கிருஷ்ணரைப் பார்க்க முடியும்? எனவேதான் சாஸ்திரம் கூறுகிறது, அதஹ ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்திரியைஹி (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 17.136). இந்த மங்கிய ஜடக் கண்களைக் கொண்டு, ஒருவனால் கிருஷ்ணரைப் பார்க்க முடியாது, அல்லது கிருஷ்ணரின் பெயரையும் கேட்க முடியாது, நாமாதி. நாம என்றால் பெயர். நாம என்றால் பெயர், உருவம், குணங்கள், லீலை. இவைகளை உங்களுடைய பௌதிக மங்கிய கண்களாலோ அல்லது புலன்களாலோ புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவை புனிதப்படுத்தப்பட்டால், சேவொன்முகே ஹி ஜிஹ்வாதௌ, ஒருவேளை அவைகள் பக்தித்தொண்டின் வழியால் புனிதம் அடைந்தால், உங்களால் கிருஷ்ணரை எப்பொழுதும் எங்கேயும் பார்க்க முடியும். ஆனால் சாதாரண மனிதர்களுக்கு, அலக்ஷ்யம்: கண்களுக்குப் புலப்படாது. கிருஷ்ணர் எங்கும் நிறைந்திருக்கிறார், கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார், அண்டாந்தர-ஸ்த- பரமாணு-சயாந்தர-ஸ்தம். ஆக அலக்ஷ்யம் சர்வ-பூதானாம். கிருஷ்ணர் வெளியேயும், உள்ளேயும், இருபக்கமும் இருக்கிறார். இருப்பினும் கிருஷ்ணரைப் பார்க்கக்கூடிய கண்கள் இல்லாதவரை நம்மால் கிருஷ்ணரை பார்க்கமுடியாது. ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம், கண்களைத் திறந்து எவ்வாறு கிருஷ்ணரைப் பார்ப்பது என்பதுதான். பிறகு உங்களால் கிருஷ்ணரைப் பார்க்க முடிந்தால், அந்த: பஹி:, அதுவே உங்கள் வாழ்க்கையின் வெற்றி. ஆகவே தான் சாஸ்திரம் கூறுகிறது, அந்தர் பஹிர். அந்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா ததஹ கிம் நான்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா ததஹ கிம் எல்லோரும் பக்குவம் அடைய முயற்சிக்கிறார்கள், ஆனால் ஒருவர் கிருஷ்ணரை அகத்திலும் புறத்திலும் பார்க்க முடியும் பொழுதுதான் அதை பக்குவம் என்பார்கள். அதுதான் பக்குவநிலை.