TA/Prabhupada 0025 - நாம் நேர்மையான உண்மைப் பொருளைக் கொடுத்தால், அது கண்டிப்பாக உணரப்படும்



Conversation with Yogi Amrit Desai of Kripalu Ashram (PA USA) -- January 2, 1977, Bombay

யோகி அம்ரித் தேசாய்: தங்களிடம் எனக்கு மிகுந்த அன்பு உண்டு, நான் கண்டிப்பாக தங்களுடைய தரிசனத்தைப் பெற வேண்டும் என நினைத்தேன்.

பிரபுபாதர்: மிக்க நன்றி.

யோகி அம்ரித் தேசாய்: நான் பக்தர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் சொன்னேன் தாங்கள்... பிரபுபாதர்: நீங்கள் டாக்டர் மிஸ்ராவுடன் இருக்கிறீர்களா?

யோகி அம்ரித் தேசாய்: இல்லை, நான் இல்லை. நான் இங்கிருக்கும் அனைத்து பக்தர்களிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன். நான் கூறினேன், ஸ்ரீ பிரபுபாதர் தான் பக்தி மார்க்கத்தை, அதிகமாக தேவைப்படும் மேற்கத்தியர்களுக்கு கொண்டு வந்த முதல் மனிதர். ஏனென்றால் அங்கே அவர்கள் அதிகமாகவே தன் மூளையால், சிந்தித்து, சிந்தித்து, சிந்தித்து குழம்பி போயிருக்கிறார்கள். இந்த அன்பின் பாதை மிகவும் ஆழமானது.

பிரபுபாதர்: கவனித்தீர்களா. அசலான ஒரு விஷயத்தை வழங்கினால்

யோகி அம்ரித் தேசாய்: மிகுவும் அசலானது.

பிரபுபாதர்: அதை கண்டிப்பாக உணருவார்கள்.

யோகி அம்ரித் தேசாய்: அதனால்தான் இது மிக அழகாக வளர்ந்து கொண்டிருக்கிறது, ஏனென்றால் இது அசலானது.

பிரபுபாதர்: மேலும் இந்த அசலான விஷயத்தை வழங்குவது இந்தியர்களின் கடமை. அதுதான் பர-உபகாரம். எனக்கு முன், எல்லா சுவாமிகளும் யோகிகளும் அவர்களை ஏமாற்ற அங்கே சென்றார்கள்.

யோகி அம்ரித் தேசாய்: இல்லை, உண்மையை வழங்கினால் எங்கே தாம் நிராகரிக்கப்படுவோமோ என்று பயந்தார்கள்.

பிரபுபாதர்: உண்மை எதுவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை. (சிரிப்பு) அது பயம் அல்ல. ஏன்? ஒருவர் உண்மையின் தளத்தில் இருக்கும் பொழுது, அவர் ஏன் பயப்பட வேண்டும்?

யோகி அம்ரித் தேசாய்: நிச்சயமாக.

பிரபுபாதர்: அவர்களுக்கு உண்மை என்னவென்றே தெரியாது, விவேகானந்தரிலிருந்து ஆரம்பித்து.

யோகி அம்ரித் தேசாய்: எல்லோரும், அது சரி தான். அப்படிப் பார்த்தால், நீங்கள் வந்த பிறகு... நான் 1960-ல் அங்கு இருந்தேன். நான் யோகம் கற்றுத் தர ஆரம்பித்தேன். ஆனால் தாங்கள் வந்ததிலிருந்து, பக்தி மற்றும் மந்திர ஜெபத்தை கற்றுத் தருவதில் இருந்த பயம் போய்விட்டது. ஆகையால் தற்பொழுது ஆசிரமத்தில் பக்தி நிறைந்திருக்கிறது, நிறைய பக்தி ஈடுபாடுகள் தொடங்கியுள்ளன. மேலும் நான் உங்களுக்கு என் மரியாதையை தெரிவித்தது ஏனென்றால் அவர்களுக்கு இதை வழங்க எனக்கு பயமாக இருந்தது, அதாவது நான் நினைத்தேன், "அவர்கள் கிறித்தவர்கள். அவர்களுக்கு இந்த பக்தியெல்லாம் அவ்வளவு பிடிக்காது. அவர்கள் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள்." ஆனால் தாங்கள் அதிசய நிகழ்ச்சியை நிறைவேற்றி இருக்கிறீர்கள். கடவுள், கிருஷ்ணர், தங்கள் மூலமாக அற்புதத்தை நிறைவேற்றி இருக்கிறார். இது மிகவும் அற்புதமான விஷயம், பூமியிலேயே மிகப் பெரிய ஒரு அதிசயம். நான் இதை உறுதியாக நம்புகிறேன். பிரபுபாதர்: இப்படி நீங்கள் கூறியதற்கு நன்றி. நாம் உண்மையான விஷயத்தை கொடுத்தால், அது நிச்சயமாக பயனளிக்கும்.

யோகி அம்ரித் தேசாய்: சரி தான். இதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன். எல்லோரும்... எங்களிடம் சுமார் 180 பேர் நிரந்தரமாக ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிக்கிறார்கள். எல்லோரும் 4 மணிக்கு எழுந்து, இரவு 9 மணிக்கு எல்லாம் படுக்கைக்கு சென்றுவிடுகிறார்கள். அத்துடன் அவர்கள் ஒருவரையொருவர் தொடுவது கூட இல்லை. அவர்கள் தனிப்பட்ட அறைகளில் தான் படுக்கிறார்கள். அவர்கள் சத்-சங்கத்தில் உட்காருவது கூட தனித்தனியாகதான். எல்லாம் கண்டிப்பாக நடக்கிறது. போதைப் பொருள் இல்லை, மதுபானம் இல்லை, அசைவம் இல்லை, காப்பி இல்லை, டீ இல்லை, பூண்டு இல்லை, வெங்காயம் இல்லை. தூய்மையாக.

பிரபுபாதர்: மிக நன்று. ஆம். நாங்கள் இதை பின்பற்றுகிறோம்.

யோகி அம்ரித் தேசாய்: ஆம்.

பிரபுபாதர்: ஆனால் நீங்கள் விக்ரகம் ஏதாவது வைத்திருக்கிறீர்களா? யோகி அம்ரித் தேசாய்: ஆம். பகவான் கிருஷ்ணரும் ராதையும் எங்கள் மூலவர்கள். என் குரு சுவாமி க்ரிபாலு-ஆனந்தி. அவர் இருப்பது... பரோடா அருகில் அவருக்கு ஆசிரமம் இருக்கிறது. அவர் இருபத்தி-ஏழு ஆண்டுகளுக்கு தன்னுடைய சாதனையை கடைப்பிடித்தார், அத்துடன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முழுமையாக மௌனமாக இருந்தார். பல மக்கள் அவரிடம் வேண்டிக்கேட்பதால், கடந்த சில வருடங்களாக அவர் வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ பேசுகிறார். பிரபு பாதர்: அவர் ஜபம் செய்வதில்லையா? யோகி அம்ரித் தேசாய்: அவர் ஜபிப்பார். மௌன விரதம் இருக்கும் பொழுது ஜபம் செய்வதற்கு அனுமதி அவருக்கு உண்டு. ஏனென்றால் அவர் சொல்லும் பொழுது... நீங்கள் இறைவனின் பெயரைச் சொல்லும் பொழுது, அது மௌனத்தை கலைப்பதாகாது. ஆகையால் அவர் ஜபிப்பார். பிரபுபாதர்: மௌனம் என்றால் நாம் வெட்டிப் பேச்சு பேசக்கூடாது. நாம் ஹரே கிருஷ்ண ஜபம் செய்ய வேண்டும். அதுதான் மௌனம். பௌதிக விஷயங்களைப் பற்றி பேசி நேரத்தை வீணாக்குவதற்கு பதிலாக, ஹரே கிருஷ்ண நாமத்தை ஜபிப்போம். அதுதான் செய்ய உகந்தது. மற்றும் மௌனம் என்பது செய்யக்கூடாததை குறிக்கிறது. வெட்டிப் பேச்சை நிறுத்துங்கள்; அர்த்தமுள்ள பேச்சு பேசுங்கள். யோகி அம்ரித் தேசாய்: சரியாக சொன்னீர்கள்! அதுதான் சரி. பிரபுபாதர்: பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததெ (பகவத் கீதை 2.59). பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததெ. ஒருவன் தன்னுடைய வெட்டிப்பேச்சை நிறுத்தினால், பிறகு பரம், பரமபுருஷரான முழுமுதற்... பரம் த்ருஷ்ட்வா நிவர்த்ததே. உங்களிடம் செய்வதற்கு சிறந்த விஷயங்கள் இருந்தால், நீங்கள் இயல்பாகவே தேவையற்றவைகளை விட்டுவிடுவீர்கள். ஆக பௌதிக விஷயம் எதுவானாலும், அது தேவையற்றதே. கர்ம, ஞானம், யோகம், அவைகள் அனைத்தும் பௌதிகத்தைச் சார்ந்தவை. கர்மம், ஞானம், யோகம். பொதுவாக யோகம் என்றழைக்கப்படும் முறைகள் உட்பட, அனைத்தும் பௌதிகம் தான்.