TA/Prabhupada 0042 - இந்த தீட்சை, இதை கவனமாக முக்கியமானதாக எடுத்துக் கொள்ளுங்கள்



Initiation Lecture Excerpt -- Melbourne, April 23, 1976

Prabhupāda:

சைதன்ய-சரிதாமிர்தாவில், ஸ்ரீலா ரூப கோஸ்வாமிக்கு கற்பித்துக்கொண்டிருந்த பொழுது, சைதன்ய மஹாபிரபு கூறினார், ஐ ரூப ப்ரமான்ட ப்ரமிதெ கொனா பாக்கியவான் ஜீவ குரு-க்ரிஷ்ணா-க்ருபாய பாய பக்தி-லதா-பீஜா (ஸி.ஸி.19.151) உயிர்வாழிகள், ஒரு பிறவியிலிருந்து மற்றொன்றுக்கு மறுபிறவி எடுக்கிறார்கள் அத்துடன் ஒரு கோள்கிரகத்திலிருந்து மற்றொன்றுக்கு அலைகிறார்கள். சில சமயங்களில் தாழ்ந்த தரமிக்க வாழ்க்கை, சில சமயங்களில் உயர்தர வாழ்க்கை. இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. இதை சம்சார-சக்ர-வர்த்மானி என்று அழைப்பார்கள். முந்திய இரவு நாம் விளக்கிக்கொண்டு இருந்தோம், மிர்த்யு-ஸம்சார-வரத்மனி. இந்த முக்கிய வார்த்தை உபயோகிக்கப்பட்டது, மிர்த்யு-ஸம்சார-வரத்மனி. வாழ்க்கையில் மிகவும் கடினமானது, மரணமடைவது. அனைவரும் இறப்பதற்கு அஞ்சுகிறார்கள் ஏனென்றால் இறப்பிற்குப்பின் என்ன நடக்கும் என்று ஒருவருக்கும் தெரியாது. முட்டாள்களாக இருப்பவர்கள், விலங்குகளாவார்கள். உதாரணத்திற்கு விலங்குகள் கொல்லப்படுகின்றன, மற்ற விலங்குகள் "நான் பாதுகாப்பாக இருக்கிறேன்" என்று நினைக்கிறது. ஆகையால் சிறிது அறிவுள்ள எவரும் இறந்து மற்றொரு உடலை பெற விரும்பமாட்டார்கள். அத்துடன் நாம் எம்மாதிரியான உடலை பெறப் போகிறோம் என்று நமக்குத் தெரியாது. ஆகையால் இந்த தீட்சை குருவினுடையவும் கிருஷ்ணருடையவும் அருளாலானது இதை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இதை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு பெரிய வாய்ப்பு. பீஜா என்றால் விதை, பக்தியின் விதை. ஆகையால் நீங்கள் இறைவனுக்கு முன் செய்த சத்தியம், ஆன்மீக குருவின் முன், அக்னியின் முன், வைஷ்ணவர்கள் முன் செய்த சத்தியத்திலிருந்து வழித் தவறிவிடாதீர்கள். பிறகு நீங்கள் உங்கள் ஆன்மீக வாழ்வில் நிலைத்திருப்பீர்கள்: புறக்கணிக்கப்பட்ட உடல் உறவு, மாமிசம் உண்பது, சூதாடுதல், மதுபானம் அருந்துதல் கூடாது - இந்த நான்கும் கூடாது - அத்துடன் ஹரே கிருஷ்ணா ஜபித்தல் - ஒன்றே வேண்டும். நான்கு கூடாது, ஒன்று வேண்டும். அது உங்கள் வாழ்க்கைக்கு வெற்றியை கொடுக்கும். இது மிகச் சுலபமானது. இதில் கஷ்டமே இல்லை. ஆனால் மாயை மிகவும் வலிமை மிக்கது, சில நேரங்களில் நம்மை வழித்தவறச் செய்யும். ஆகையால் நம்மை வழித்தவற மாயை முயற்சி செய்தால், சும்மா கிருஷ்ணரை வழிபடுங்கள். "தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள். நான் முழுமையாக சரணடைந்துவிட்டேன், அன்பு கூர்ந்து எனக்கு பாதுகாப்பு அளியுங்கள்," பிறகு கிருஷ்ணர் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள். உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களும் ஆசீர்வாதமும் அளிக்கிறேன். ஆகையால் நாம் பக்தியை இந்த சந்தர்ப்பத்தில் எடுத்துக் கொள்வோம், பக்தி-லதா-பீஜா. மாலீஹனா ஸே பீஜா கரே ஆரோபனா. ஆகையால் நமக்கு ஒரு நல்ல விதை கிடைக்கும் பொழுது, நாம் அதை பூமியில் விதைக்க வேண்டும். உதாரணத்திற்கு, உங்களுக்கு முதல் தரமான ரோஜாபூவின் நல்ல விதை கிடைத்தால், நீங்கள் அதை பூமியில் விதைத்து அத்துடன் கொஞ்சம், கொஞ்சமாக நீர் ஊற்றுவீர்கள். அது வளரும். ஆகையால் இந்த விதை நீர் உற்றுவதால் வளர்ந்து வரும். நீர் ஊற்றுதல் என்பது என்ன? ஸ்ரவனா கீர்தனா ஜலெ காரெய ஸெசனா (ஸி.ஸி.மத்திய19,152). விதைக்கு நீர் ஊற்றுதல், பக்தி-லதா, அது ஸ்ரவனா கீர்தனா, கேட்பதும், ஜபித்தலும். ஆகையால் நீங்கள் சந்நியாசிகள், வைஷ்ணவர்கள் ஆகியவர்களிடம் இருந்து இன்னும் அதிகமாக கேட்பீர்கள். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள். அது என்னுடைய வேண்டுகோள். மிக்க நன்றி. பக்தர்கள்: ஜெய் ஸ்ரீலா பிரபுபாதர்!