TA/Prabhupada 0058 - ஆன்மீக உடல் என்றால் நித்தியமான வாழ்க்கை



Lecture on BG 2.14 -- Mexico, February 14, 1975

உண்மையில், ஆன்மீக உடல் என்றால் நிறைவும் ஞானமும் உள்ள நித்தியமான வாழ்க்கை. இப்பொழுது நாம் பெற்றிருக்கும் இந்த உடல், ஜட உடல், இது நித்தியமானதும் அல்ல, நிறைவானதும் அல்ல, முழுமையான ஞானம் பெற்றதுமல்ல. நாம் ஒவ்வொருவறுக்கும், இந்த ஜட உடல் முடிவடைந்துவிடும் என்று தெரியும். அத்துடன் இது முழுவதும் அறியாமை நிறைந்தது. இந்த சுவருக்கு அப்பால் என்ன இருக்கிறது, நம்மால் எதுவும் சொல்ல இயலாது. நமக்கு புலன்கள் உள்ளன, ஆனால் அவை அனைத்தும் வரையறுக்கப்பட்டது, நிறைவடையாதது. சில சமையங்களில் நாம் பார்க்கும் திறனை பற்றி பெருமைபடுவதுடன் சவால் விடுகிறோம், "உங்களால் இறைவனை எனக்கு காட்ட முடியுமா?" ஆனால் வெளிச்சம் மறைந்தவுடன், நம் பார்வைக்கும் சக்தி சென்றுவிடும் என்பதை நாம் நினைவு கொள்ள மறந்துவிடுகிறோம். ஆகையினால் உடல் முழுவதும் நிறைவடையாதது அத்துடன் அறியாமை நிறைந்தது. ஆன்மீக உடல் என்றால் ஞானம் மிக நிறைந்தது, சும்மா நேர்மாறானது. ஆகையால் அந்த உடலை அடுத்த ஜென்மத்தில் பெறலாம், அந்த உடலை பெற நாம் மேன்மைப்பட வேண்டும். அடுத்த உடலை மேல் கோளரங்கத்தில் பெற நாம் மென்மையடையலாம் அல்லது அடுத்த உடலை பூனைகளும் நாய்களும் போல் நாம் மேம்படுத்தலாம், அத்துடன் இத்தகைய உடலை நித்தியமானதாக மேம்படுத்தலாம், நிறைவான ஞானம். ஆகையினால் சிறந்த அறிவுள்ளவர்கள் அடுத்த உடலை நிறைவான மகிழ்ச்சி, ஞானம், அத்துடன் நிலை பேறுடைமாயுடன் பெற முயற்சிப்பார்கள். அது பகவத் கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. யத் கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம (ப.கீ.15.6). அந்த இடம், அந்த கோள்கிரகம், அல்லது அந்த வானம், எங்கு சென்றாலும் நீங்கள் மறுபடியும் இந்த ஜட உலகத்திற்கு திரும்பி வர முடியாது. ஜட உலகத்தில், மேலான கோளரங்கத்திற்கு, ப்ரமலோகத்திற்கு, நீங்கள் மேம்படுத்தப்பட்டாலும், இருந்தும், நீங்கள் திரும்பவும் வர வேண்டும். மற்றும் நீங்கள் ஆன்மீக உலகத்திற்குச் செல்ல மிகச் சிறந்த முயற்சி செய்து, வீடுபெரு, முழுமுதற் கடவுளை அடைந்தால், நீங்கள் மறுபடியும் இந்த ஜட உடலை ஏற்க வரமாட்டிர்காள்.