TA/Prabhupada 0075 - நீங்கள் கண்டிப்பாக ஒரு குருவிடம் செல்ல வேண்டும்



Lecture on SB 1.8.25 -- Mayapur, October 5, 1974

ஒருவர் உயர்ந்த நிலையில் உள்ள கேள்விகளை துருவியறிந்து விசாரணை செய்தால், ப்ரம-ஜிஞாசா, அப்படியென்றால் அவருக்கு ஒரு குரு தேவைப்படுகிறார். தஸ்மாத் குரும் ப்ரபத்யதே: "நீங்கள் தற்பொழுது உயர்ந்த நிலையின் ஞானத்தை துருவியறிந்து தெரிந்துக் கொள்ள விரும்புகிறீர்கள், ஆகையால் நீங்கள் கட்டாயமாக ஒரு குருவிடம் செல்ல வேண்டும்." தஸ்மாத் குரும் ப்ரபத்யதே. யார்? ஜிஞாசு: ஸ்ரேய உத்தமம். உத்தமம். உத்தமம் என்றால் இந்த இருளுக்கு மேல் இருப்பது. இந்த உலகம் முழுவதும் இருளில் இருக்கிறது. ஆகையால் இந்த இருளுக்கு மேல் போக விரும்பும் ஒருவர். தமாஸி மா ஜோதிர் கம. வேத விதிகளின்படி: "நீங்கள் தானே இருளில் இருக்காதீர்கள். வெளிச்சத்திற்கு போங்கள்." அந்த வெளிச்சம்தான் ப்ரமன், ப்ரம-ஜிஞாசா. ஆகையால் துருவியறிந்துக் கொள்ளும் ஒருவர், உத்தம... உட்கதா-தம யஸ்மாத். உட்கதா-தம என்றால் அறியாமை. ஆகையால் ஆன்மீக உலகில் அறியாமை இல்லை. ஞான. மாயாவாதி தத்துவஞானிகள், அவர்கள் ஞான, ஞானவான், என்று வெறுமனே சொல்வார்கள். ஆனால் ஞான என்பது ஒரே மாதிரியானதல்ல. அங்கே பலவித ஞானங்கள் உள்ளன. உதாரணத்திற்கு விருந்தாவனத்தில், அங்கு ஞான உள்ளது, ஆனால் பலவிதத்தில் உள்ளன. யாராவது கிருஷ்ணரை ஒரு சேவகான நேசிப்பார். யாராவது கிருஷ்ணரை ஒரு நண்பனாக நேசிப்பார். யாராவது கிருஷ்ணரின் நிறைவை பாராட்டி போற்றுவார்கள். யாராவது கிருஷ்ணரை தந்தையும் தாயுமாக நேசிப்பார்கள். யாராவது கிருஷ்ணரை மணவாழ்க்கைக்குரிய காதலராக, கள்ள காதலராக - பரவாயில்லை. யாராவது கிருஷ்ணரை எதிரியாக நேசிப்பார்கள். உதாரணத்திற்கு கம்ஸ, அதுவும் கூட விருந்தாவன லீலா. அவர் எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றி வேறு விதமாக சிந்தித்துக் கொண்டிருப்பார், கிருஷ்ணரை எவ்வாறு கொலை செய்வது என்று. பூதனா, அவள் கூட வெளிப்படையாக கிருஷ்ணரை நேசிப்பவளாக வந்தாள், தன் மார்பில் அவள் பால் கொடுக்க வந்தாள்; ஆனால் அதன் உள் நோக்கம் எவ்வாறு கிருஷ்ணரை கொல்வதாகும். ஆனால் அதுவும் கூட மறைமுக நேசமாக ஏற்கப்பட்டது, மறைமுக நேசமாக. அனவயாத். ஆகையால் கிருஷ்ணர் ஜெகத்-குரு ஆவார். அவர்தான் மூலமான ஆசிரியர். ஆசிரியர் நேரில் பகவத் கீதையை கற்பிக்கிறார், ஆனால் நாம் துஷ்டர்கள், அந்த பாடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. சும்மா பாருங்கள். ஆகையினால் நாம் மூடாஸ். ஜெகத்-குருவினால் கொடுக்கப்பட்ட பாடத்தை ஏற்றுக் கொள்ளும் தகுதியற்ற எவரும், அவர் ஒரு மூடா. ஆகையினால் நம் ஆய்வுக்-குழாய்படி: ஒருவருக்கு கிருஷ்ணரை தெரியவில்லை என்றால், ஒருவருக்கு பகவத் கீதையை பின்பற்ற தெரியவில்லை என்றால், நாங்கள் உடனடியாக அவரை துஷ்டன் என்று முடிவு செய்வோம். யாராயிருப்பினும் பரவாயில்லை, அவர் பிரதம மந்திரியாக இருக்கலாம், உயர் நீதி மன்ற நீதிபதியாக இருக்கலாம் அல்லது, இல்லை. இல்லை, அவர் பிரதம மந்திரி. அவர் உயர் நீதி மன்ற நீதிபதி. இருப்பினும், மூடா?" ஆம். "எப்படி?" மாயயாபஹ்ர்த-ஞானா: (ப.கீ.7.15) "அவருக்கு கிருஷ்ணரைப் பற்றிய ஞானமில்லை. அவர் மாயையினால் கவரப்பட்டிருக்கிறார்." மாயயாபஹ்ர்த-ஞானா ஆஸுரம் பாவமாஸ்ரிதா:. ஆகையினால் அவர் மூடா. ஆகையால் நேரடியாக கற்பித்தல். நிச்சயமாக, மெதுவான மொழியில் எந்த கலவரமும் ஏற்படாமல், நீங்கள் சொல்லலாம், ஆனால் யாராயினும் கிருஷ்ணரை ஜெகத்-குருவாக ஏற்றுக் கொள்ளாமல் அத்துடன் அவருடைய படிப்பினை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், அவர் ஒரு துஷ்டன். உதாரணத்திற்கு ஜெகண்ணாத புரீயில் இந்த மூடர் போல். அவர் கூறுகிறார் அதாவது "நீங்கள் மறு பிறவி எடுங்கள். பிறகு நீங்கள் செய்ய முடியும்." அந்த மூடா, அவரை துஷ்டனாக எடுத்துக் கொள்ளுங்கள். ஏன்? அவர் ஒரு ஜெகத்-குரு; அவர் மேலும் கூறுகிறார், "நான் தான் ஜெகத்-குரு." ஆனால் அவர் ஜெகத்-குருவல்ல. அவர் ஜெகத் என்றால் என்னவென்று கூட பார்த்ததில்லை. அவர் ஒரு தவளை. மேலும் தான் ஜெகத்-குரு என்று உரிமை கோருகிறார். ஆகையால் அவர் ஒரு மூடா. கிருஷ்ணர் கூறுகிறார். அவர் ஒரு மூடா ஏனென்றால் அவர் கிருஷ்ணரால் அளிக்கப்பட்ட பாடத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.